ஒரு சதுப்புநிலத்தின் ஓலம்

By செய்திப்பிரிவு

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையின் மிகப் பெரிய குப்பை மலையான பெருங்குடி, பற்றி எரிந்ததன் காரணமாக, அதன் அருகிலுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் மீண்டும் பொது கவனத்துக்கு வந்துள்ளது. இருந்தபோதும் சென்னையின் பல பகுதிகளில் இருப்பவர்களுக்கு இயற்கைப் புகலிடமான பள்ளிக்கரணையைத் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும்கூட பலரும் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் நாள்தோறும் சந்தித்துவரும் அவலத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டியுள்ளது, சென்னையைச் சேர்ந்த சூழலியல் ஆவணப்படக் கலைஞர்களான அரவிந்த் மோகன்ராஜ், சிபி உருவாக்கியுள்ள ‘The Wetland’s Wail’. நான்கரை நிமிடமே ஓடும் இந்த குறும்படம் பள்ளிக்கரணை குறித்த அடிப்படைப் புரிதலை வழங்குகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் குறும்படத்தை அன்சோல்டு ஸ்டோரீஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பல பறவை பார்வைக்கோணக் காட்சிகள் இயற்கைச் சீரழிவின் தீவிரத்தை நமக்கு எளிதாகப் புரியவைத்துவிடுகின்றன. தொடக்கக் காட்சியிலேயே வலதுபுறம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதி பசுமையாகவும், இடதுபுறம் பெருங்குடிக் குப்பை மலை சாம்பல் நிறத்திலும் இருப்பது காட்டப்படுகிறது. இரண்டு பகுதிகளையும் நடுவில் ஒரு கோடுபோல துரைப்பாக்கம்-தாம்பரம் சாலை பிரிக்கிறது.

உயிர்பிழைக்கத் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு சதுப்புநிலத்தின் உயிர்த் துடிப்பை இந்தக் குறும்படத்தில் காணலாம். மனிதர்களும் நகர்மயமாக்கமும் அரசு முன்னெடுக்கும் வளர்ச்சித் திட்டங்களும் அந்த உயிர்த் துடிப்பை முற்றிலும் நிறுத்துவதற்கு மேற்கொண்டுவரும் தவறான முயற்சிகளை இந்தக் குறும்படம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் தற்போது பின்பற்றிவரும் வளர்ச்சி மாதிரி இயற்கையை எப்படிச் சீர்குலைக்கிறது என்பதைக் காட்டுவழியாகக் கூறும் இந்தப் படம், சதுப்புநிலம் போன்ற இயற்கைப் புகலிடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகக் கவனப்படுத்தியுள்ளது.

2019 நேச்சர் இன் ஃபோகஸ் திரைப்பட விழாவில் வளர்ந்துவரும் திறமை பிரிவிலும், 2020 மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் சார்ந்த பிரிவிலும் இந்தக் குறும்படம் விருதுகளைப் பெற்றது.

வீடியோவைப் பார்க்க:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

40 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்