பறக்கும் உணவு: மழைக்கால ஈசல்கள்

By த.ஜான்சி பால்ராஜ்

ஈசல்கள் எனப்படும் அழகிய பூச்சிகள், மழைக்காலத்தில் புற்றிலிருந்து வெளியில் வந்து கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருப்போம். அதிக வெயிலோ காற்றோ இல்லாத ரம்மியமான வானிலையில்தான் ஈசல்கள் புற்றுகளிலிருந்து வெளியேறுகின்றன. ஈசல்கள் வானிலையை நன்கு கணிக்கும் திறன் பெற்றவை. அவற்றின் மெல்லிய ஈரிணைச் சிறகுகளால் பெருங்காற்றையோ மழையையோ எதிர்த்துப் பறக்க இயலாது. எனவே, அதற்கேற்ற சூழலை அறிந்தே ஈசல்கள் நிலத்திலிருந்து வெளியேறுகின்றன. அவற்றால் ஒரே நேரத்தில் அதிகப்படியாகப் பத்தடிக்குமேல் பறக்க இயலாது. வெளிவந்த சில மணி நேரத்துக்குள் அவற்றின் சிறகுகள் பெரும்பாலும் உதிர்ந்து விழுந்துவிடுகின்றன; உதிர்ந்ததும் நிலத்தில் புழுக்களாக ஊர்ந்து அலைகின்றன. ஈசல்கள்சிறகு முளைக்கும் முன்புவரை கறையான்களாக ஊர்ந்து கொண்டிருப்பவை.

உடனடி இரை: இவை நிலத்தின் மேற்பகுதியில் பறக்கும் மிகக்குறைந்த நேரத்திலும் பறவைகளாலும் ஊர்வனவற்றாலும் பெருமளவில் பிடித்து உண்ணப் படுகின்றன. மழைக்காலத்தில் நீர்நிலைகளில் வாழும் பூச்சிகளையும் மீன்களையும் உண்டுக் களிக்கக் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்லும் கொக்குகள் போன்ற மீன்பிடிப் பறவைகளும் ஈசல்கள் பறப்பதைக் கவனித்துவிட்டால் ஏரி, குளங்களைப் புறக்கணித்துவிட்டு ஈசல்களைப் பிடிக்க தரையிறங்கிவிடுகின்றன. கொழுப்பும் புரதமும் நிரம்பிய, சுவையான, எளிதில் பிடிபடக்கூடியவையாக ஈசல்கள் இருப்பதே இதற்கான முதன்மை காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்