டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 20

By செய்திப்பிரிவு

நவீன இந்தியா - பகுதி 1

ஐரோப்பியர்கள் வருகை

துருக்கியர்கள் கான்ஸ்டான்டிநோபிளை (இஸ்தான்புல்) கைப்பற்றிய வருடம் பொ.ஆ.1453. புதிய கடல்வழி கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றிய போர்த்துகீசிய இளவரசர் ஹென்றி ஆவார்.
பொ.ஆ.1487இல் நன்னம்பிக்கை முனையை அடைந்த போர்த்துகீசிய மாலுமி பார்த்தலோமியோ டயஸ்.
பொ.ஆ.1498 ல் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்தடைந்தபோது அவரை வரவேற்ற இந்திய மன்னர்
சாமரின் ஆவார்.

போர்த்துக்கீசியர்

போர்த்துக்கீசியரின் கேரள வணிகத் தலங்கள் கள்ளிக்கோட்டை, கண்ணனூர், கொச்சின் ஆகியvai.
இந்தியாவின் போர்த்துக்கீசிய பகுதிகளின் ஆளுநராக பொ.ஆ.1505 முதல் 1509 வரை இருந்தவர் பிரான்சிஸ்-கோ-அல்மெய்டா
பொ.ஆ.1509 இல் எகிப்தியர்களால் அல்மெய்டா கொல்லப்பட்ட பின் இந்தியாவின் போர்த்துக்கீசிய ஆளுநராக இருந்தவர்
அல்போன்சா -டி- கார்க்.
இந்திய-போர்ச்சுக்கல் திருமண உறவுகளை ஊக்குவித்து சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டதால் அல்போன்சா ஆங்கிலேய ஆளுநர் வில்லியம் பெண்டிங் முன்னோடியாக கருதப்படுகிறார். போர்த்துக்கீசிய ஆதிக்கம் இந்தியாவில் வளர்ந்த பகுதிகள் கோவா, டாமன், டையூ.
அல்போன்சா பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றிய வருடம் பொ.ஆ.1510.

நெதர்லாந்து/டச்சுக்காரர்கள்

ஒருங்கிணைந்த நெதர்லாந்து கிழக்கிந்திய கம்பெனி ஹாலந்து நாட்டில் தொடங்கப்பட்ட வருடம்
பொ.ஆ.1601.
டச்சுக்காரர்கள் இந்தியாவில் முதன்முதலாக வணிகத்தலம் நிறுவிய இடம் மசூலிப்பட்டினம். இந்தியாவில் டச்சுக்காரர்கள் முதல் கோட்டையை கட்டி அதனை தலைமையிடமாக கொண்ட இடம் - சென்னை அருகே பழவேற்காடு.
டச்சுக்காரர்கள் வணிகம் செய்வதில் இந்தியாவை விட அதிக ஈடுபாடு கொண்டிருந்த நாடு -
இந்தோனேசியா.
பொ.ஆ.1616இல் டேனியர் கிழக்கிந்திய குழு நிறுவப்பட்ட நாடு டென்மார்க்.
டேனியர்கள் இந்தியாவில் முதன்முதலாக வணிகத்தலம் தொடங்கப்பட்ட இடம் தரங்கம்பாடி.

ஆங்கிலேயர்கள்

பிரிட்டிஷ் அரசி எலிசபெத் 100 வணிகர்கள் கொண்ட குழுவிற்கு கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய வருடம்
பொ.ஆ.1600.
இந்தியாவில் வணிகத்தலம் அமைக்க அனுமதி பெறுவதற்காக வில்லியம் ஹாக்கின்ஸ் முகலாய மன்னர் ஜஹாங்கீர் அவைக்கு வருகை புரிந்த வருடம்
பொ.ஆ.1608 (அனுமதி கிடைக்கவில்லை)
பொ.ஆ.1615 இல் இந்தியாவில் சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச் ஆகிய நகரங்களில் வணிகத்தலங்கள் அமைக்க ஜஹாங்கீர் அரசிடம் அனுமதி பெற்ற ஆங்கிலேயப் பிரதிநிதி சர் தாமஸ் மன்றோ.
பொ.ஆ.1639இல் சந்திரகிரி மன்னரிடமிருந்து சென்னை பகுதியை விலைக்கு வாங்கிய ஆங்கிலேய வணிகர்
பிரான்சிஸ் - டே.
பிரான்சிஸ் - டே சென்னையில் செயின்ட் ஜார்ஜ் வணிக கோட்டையை கட்டிய வருடம்
பொ.ஆ.1640.
பிரிட்டிஷ் மன்னர் இரண்டாம் சார்லஸ் பொ.ஆ.1661இல் போர்ச்சுக்கீசிய இளவரசியை மணந்து பம்பாய் பகுதியை சீதனமாகப் பெற்றார்.
முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் அனுமதி பெற்று கொல்கத்தாவில் ஆங்கிலேயர் வணிகத்தலம் தொடங்கிய வருடம்
பொ.ஆ.1690 .
மூன்றாம் வில்லியம் நினைவாக பொ.ஆ.1690 இல் கட்டிய வில்லியம் கோட்டை அமைந்திருக்கும் இடம் கொல்கத்தா.

பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு பதினான்காம் லூயியின் பொருளாதார ஆலோசகரான கோல்பர்ட் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட வருடம் பொ.ஆ.1664.
பொ.ஆ.1668 இல் பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் பிரான்சிஸ் கரோன் என்பவரால் இந்தியாவில் முதல் வணிகத்தலம் அமைக்கப்பட்ட நகரம் சூரத் (குஜராத்).
பொ.ஆ.1674 இல் பிரெஞ்சுக்காரர்கள் தஞ்சாவூர் மன்னரிடமிருந்து ஒரு பகுதியைப் பெற்று பாண்டிச்சேரி நகரம் அதன் தலைமையிடமாக
உருவாக்கப்பட்டது.
டுமாஸ் இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளின் ஆளுநராக பொ.ஆ.1735 முதல் 1741 வரை பணியாற்றினார்.
டுமாஸ்க்கு பின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் டியூப்ளே (ஒரு ராஜதந்திரி)

பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் இறுதிவரை தக்க வைத்துக்கொண்ட பகுதிகள்
பாண்டிச்சேரி, மாஹி, ஏனாம், காரைக்கால் ,சந்திராநகர்.
பொ.ஆ.1746 இல் அடையாறுப் போர் டியூப்ளே தலைமையில் பிரெஞ்சுப் படைக்கும் கர்நாடக நவாப் அன்வர்தீன் படைக்கும் இடையே நடைபெற்றதில்
பிரெஞ்சுப் படை வெற்றி.

ஆங்கிலேயர்களும் இந்திய மன்னர்களும்

முதல் கர்நாடகப்போரை (1746-1748) முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை அய்லாசாப்பேல் உடன்படிக்கை.
இரண்டாம் கர்நாடகப்போரில் சந்தா சாகிப் சார்பாக பிரெஞ்சுப்படையும் அன்வர்தீன் சார்பாக ஆங்கிலப் படையும் போரிட்டன.
ஆற்காட்டு வீரர் என புகழப்பட்டவர் ராபர்ட் கிளைவ்.
இரண்டாம் கர்நாடகப்போரை (1748-1754)முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை பாண்டிச்சேரி உடன்படிக்கை.
பொ.ஆ.1756இல் அலிவர்திகான் மறைவுக்குப்பின் சிராஜ் - உத் - தௌலா வங்காள நவாப் ஆக பொறுப்பேற்றார்.
123 ஆங்கிலேயர் மூச்சுத் திணறி இறந்த 'இருட்டறை துயரச் சம்பவம்' நடைபெற்ற நாள் - ஜுன் 20, 1756.

ஆங்கிலேயருடன் ரகசிய உறவு வைத்திருந்த மீர்ஜாபர் என்பவர் சிராஜ் - உத் - தௌலாவின் முதன்மை படைத்தளபதியாக செயல்பட்டார். ஜுன் 23, 1757 நடைபெற்ற பிளாசிப் போரில் சிராஜ் - உத் - தௌலா கொல்லப்பட்டார்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு வழி வகுத்த போர் அக்டோபர் 22,1764 இல் நடைபெற்ற
பக்சார் போர் ஆகும்.
வங்காளத்தில் இரட்டை ஆட்சிக்கு வழி வகுத்தவர் ராபர்ட் கிளைவ்.

ஹைதர் அலி பிறந்த வருடம் - பொ.ஆ.1722.
பொ.ஆ.1767இல் ஸ்மித் என்ற ஆங்கிலப்படைத் தளபதியால் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடங்கள்
செங்கம் ,திருவண்ணாமலை.
முதல் மைசூர் போரை (1767-69) முடிவுக்கு கொண்டு வந்தது மதராஸ் உடன்படிக்கையின்படி
தத்தம் பகுதிகளை திரும்ப பெற்றனர். ஹைதர் அலிக்கு தேவையான சமயத்தில் படை உதவி அளிப்பதாக ஆங்கிலேயர் ஒப்புதல் அளித்தனர்.
மைசூரை மராத்தியர்கள் தாக்கியதால் ஹைதர் அலி அறிவித்த போர் இரண்டாம் மைசூர் போர் (1780-84).
சர் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப்படை 1781இல் ஹைதர் அலியை தோற்கடித்த இடம் போர்ட்டோ நோவா.
ஹைதர் அலி நோயால் இறந்த வருடம் பொ.ஆ.1782. இரண்டாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை
மங்களூர் உடன்படிக்கை (1784).
மைசூரைக் கைப்பற்ற மூன்றாம் மைசூர் போரை (1789-92) ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் அறிவித்தார்.
மூன்றாம் மைசூர் போரில் திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேயரைத் தவிர எதிர் கூட்டணியில் இடம் பெற்றவர்கள் மராத்திய அரசு ,ஹைதராபாத் நிஜாம்.
மூன்றாம் மைசூர் போரை முடிவுக்கு கொண்டுவந்த உடன்படிக்கை ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை (1792).
மூன்றாம் மைசூர் போரின் முடிவுகள் : மைசூர் ராஜ்ஜியத்தில் பாதி இழப்பு.
திப்புவின் இரு புதல்வர்கள் அபதுல் காலிக் சுல்தான்
(10 வயது) மொய்சுதின் சுல்தான் (8 வயது) பிணைக் கைதிகளாயினர்.
நான்காம் மைசூர் போர் (பொ.ஆ.1799)ஏற்படக் காரணம் - திப்பு சுல்தான் வெல்லெஸ்லியின்
துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்தது.
நான்காம் மைசூர் போரின் முடிவுகள் : திப்புவின் குடும்பம் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டது .
பெரும் பகுதியை ஆங்கிலேயர் தம்முடன் இணைத்துக் கொண்டனர். மைசூரின் மத்திய பகுதி கிருஷ்ணராஜாவுக்கு அளிக்கப்பட்டது.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/892232-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-19.html

அடுத்த பகுதி நவம்பர் 9 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

35 mins ago

க்ரைம்

41 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்