சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

நவ.28: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை (417) பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் ரவிச்சந்திரன் அஸ்வின் (418). முதலிடத்தில் அனில் கும்ப்ளே (619) உள்ளார்.

நவ.28: கோவாவில் நடந்த 52-வதுசர்வதேசத் திரைப்பட விழாவில், இந்தியாவில் சினிமா படப்பிடிப்பு நடத்த உகந்த மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் தேர்வானது.

நவ.29: கரீபியன் கடலில் மேற்கிந்தியத் தீவுப் பிராந்தியத்தில் உள்ள பார்படாஸ், பிரிட்டன் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது.

நவ.30: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

டிச.1: இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டிச.2: உலகத் தடகள அமைப்பின் சார்பில் 2021ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக, உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அஞ்சு பாபி ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார்.

டிச.2: உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் வேற்றுருவம் அடைந்த ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தொற்று கர்நாடகத்தில் இருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டிச.3: நாடு முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழிசெய்யும் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

டிச.3: தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

டிச.4: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் ஆந்திரத்தின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்