சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

அக்.29: ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஸகர்பர்க் அறிவித்துள்ளார்.

நவ.1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

நவ.1: இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசியை அங்கீகரித்து, அவசர பயன்பாட்டுப் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்தது.

நவ.3: தற்போது விதிக்கப்பட்டுவரும் கலால் வரியிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நவ.3: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பை வரை இப்பொறுப்பில் அவர் இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

நவ.4: விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு இந்திய விமானப் படை குரூப் கேப்டனாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நவ.5: தாம்பரம் பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்தது.

நவ.6: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான (ஐஓசி) உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தின் தேர்வுக் குழுவில் இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் அபினவ் பிந்த்ரா இடம் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

கருத்துப் பேழை

9 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்