சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

ஆக.20: இந்திய ஹாக்கி ஆடவர், மகளிர் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்தது.

ஆக.23: மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதானமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்குப் பட்டம் சூட்டப்பட்டது.

ஆக.24: மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆக.24: டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர் தேக் சந்த்தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். இத்தொடரில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,537 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஆக.25: மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மாநில காவல்துறையினர் கைது செய்தனர். 2001இல் மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு நடந்த நிகழ்வு இது.

ஆக.26: ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தில் உறைநிலைக்கு மேலே வெப்பம் சென்றதால், 70 ஆண்டுகளில் முதன் முறையாகப் பனிப்பொழிவுக்குப் பதிலாக அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது.

ஆக.26: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ். கோராசன் என்கிற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் உள்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.

ஆக.29: டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

தொழில்நுட்பம்

52 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்