சேதி தெரியுமா?

By செய்திப்பிரிவு

தொகுப்பு: மிது

செப்.12: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்யவும் பயன்படுத்தவும் வேண்டுமென இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

செப். 13: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ‘வில்மிங்டன்’ என்ற நகரம் இரண்டாம் உலகப் போரின் பாரம்பரிய நகராக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது இந்த நகரிலேயே அவசரமாக 243 கப்பல்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

செப்.14: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. கரோனா முன்னெச்சரிக்கைக் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு வசதியாக, இக்கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. 2010-11ஆம் ஆண்டுக்குப் பிறகு கோட்டைக்கு வெளியே நடக்கும் கூட்டத்தொடர் இது.

செப்.15: மின்னணு - வன்பொருள் உற்பத்திக்கான கொள்கையை தமிழக அரசு அறிவித்தது. 2025ஆம் ஆண்டில் தமிழகத்தில் மின்னணுத் தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இக்கொள்கை.

செப்.15: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலுக்குள் நுழைந்தது. நாள் ஒன்றுக்கு சந்தை மூலதனத்தில் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைப் பெற்றுள்ள முதல் இந்திய நிறுவனம் இது.

செப்.15: இந்தியாவின் இரண்டாவது, தென்னிந்தியாவின் முதலாவது ‘கிசான் ரயில்’ ஆந்திரத்தின் அனந்தபூர் - டெல்லி இடையே தொடங்கப்பட்டது. இந்த ரயில் வேளாண் விளைப்பொருட்களை எடுத்துச் சென்றது.

செப்.18: ஜப்பானின் புதிய பிரதமராக, அமைச்சரவையின் தலைமைச் செயலாளராக இருந்துவந்த யோஷிஹைடு சுகா பதவியேற்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே அண்மையில் பதவி விலகியிருந்தார்.

செப். 18: பண்டைய இந்தியப் பண்பாடு குறித்து ஆராய இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

செப்.19: கரோனா காரணமாக ஒத்திவைக்கப் பட்டிருந்த 13ஆவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இத்தொடரில் மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்