இனி இ-ஸ்டாம்பிங் பரவலாகும்

By ஜி.எஸ்.எஸ்

வீ

ட்டை வாங்குவது, விற்பது, குத்ததைக்கு விடுவது போன்றவற்றில் தொடங்கி வணிக ஒப்பந்தங்கள் வரை எல்லாவற்றிற்கும் அரசுக்கு ஸ்டாம்ப் கட்டணம் செலுத்துவது அவசியம்.ஸ்டாம்ப் பேப்பர் என்ற ஒன்றை நாம் அறிவோம். மேல்பாதி முழுவதும் பிரம்மாண்டமான அளவில் அரசின் இலச்சினையும், அந்தத் தாளின் மதிப்பும் அச்சிடப்பட்டிருக்கும். கீழ்ப்பாதியில்தான் ஒப்பந்த வாசகங்கள் எழுதப்படும்.

சமீபகாலமாக இ-ஸ்டாம்பிங் என்ற ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. இ-மெயில் என்றால் மின்னஞ்சல் என்கிறோம் அல்லவா, அதுபோல இ-ஸ்டாம்பிங் என்றால் மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்துவது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழையபடி விற்கப்படும் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்களிலும் பத்திரங்கள் நிரப்பலாம், இ-ஸ்டாம்பிங் முறையிலும் இதைச் செய்யலாம்.

ஏதற்காக இந்தப் புதிய முறை? நமக்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவா? அதுமட்டுமல்ல, ஆங்காங்கே ஸ்டாம்ப் பத்திரங்கள் அவ்வப்போது கிடைக்காமல் போகும். இதனால் பலவிதச் சங்கடங்கள் உருவாகும். தேவையே இல்லாமல் சிலசமயம் அதிகத் தொகைக்கான ஸ்டாம்ப் பத்திரங்களையும் வாங்க வேண்டி வரலாம். இவையெல்லாம் இ-ஸ்டாம்பிங்கில் தவிர்க்கப்படுகின்றன.

எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. முத்திரைத்தாள் மோசடிகள் பரவலாகத் தொடங்கின (ஹர்ஷத் மேத்தா நினைவுக்கு வருகிறாரா?). போலி முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்பட்டால் அதனால் அரசுக்குப் பெரும் நஷ்டம். இதைத் தவிர்க்கவும் இ-ஸ்டாம்பிங் உதவுகிறது.

இ-ஸ்டாம்பிங் என்பது என்ன?

இதற்காக மத்திய அரசு ‘Stock Holding Corporation of India Limited’ என்ற அமைப்பை நியமித்திருக்கிறது. இ-ஸ்டாம்பிங்கிற்கான விண்ணப்பங்கள், பதிவுகள் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் உள்ள அனைத்தையும் இந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்கிறது.

உங்களைப் பொறுத்தவரை பத்திரங்களுக்கு இ-ஸ்டாம்பிங் செய்யும் முறை இதுதான். முதலில் மாநில அரசு இ-ஸ்டாம்பிங்கை ஏற்றுக் கொள்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். SHCIL என்ற வலைத்தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும். இதன் இணையதள முகவரி www.schcelstamp.com.

ACCயில் (அங்கீகரிக்கப்பட்ட கலெக்‌ஷன் மையங்கள்) விண்ணப்பங்களைப் பெற்று நிரப்ப வேண்டும். இந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் பெயர்கள், மின்னணு முறையில் ஸ்டாம்ப் கட்டணம் அளிக்கப்பட்ட தேதி, அந்த ஆவணத்திற்கென்று அளிக்கப்படும் தனிப்பட்ட எண் போன்ற பல விவரங்கள் அடங்கி இருக்கும். ஸ்டாம்ப் தொகையை இணையம் வழியாகச் செலுத்த முடியும். இதற்குக் கடன் அட்டை, பற்று அட்டை, RTGS, NEFT ஆகிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

வழக்கமான முறையில் பத்திரத் தாள்களை வாங்கிப் பதிவு செய்வதற்கும் இந்த இ-ஸ்டாம்பிங் முறைக்கும் கொஞ்சம் அன்னியம் இருக்கலாம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளன. சில நிமிடங்களிலேயே இப்படிச் செலுத்த முடியும். பத்திரத்தாள்கள் நாளடைவில் சிதிலமடையலாம். ஆனால் இந்த இ-ஸ்டாம்பிங்கின் முறையில் இந்தத் தகவல்கள் SHCIL அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு இ-ஸ்டாம்பிங் ஒரு தனி எண் (UNIQUE IDENTIFICATION No) அளிக்கப்படுவதால், உண்மைத் தன்மையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் இ-ஸ்டாம்பிங் சான்றிதழ்களைத் தொலைத்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நகல் பிரதி வழங்குவதில்லை. இது நாம் பழகிக் கொள்ள வேண்டிய ஒரு முறை. இப்போதைக்கு டெல்லியில் இ-ஸ்டாம்பிங் முறையில் மட்டுமே ஸ்டாம்ப் கட்டணத்தைச் செலுத்த முடியும். போகப் போக பிற மாநிலங்களிலும் இது கட்டாயமாகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்