சொந்த வீடு நூலகம்: ரியல் எஸ்டேட்டுக்கான கையேடு

By செய்திப்பிரிவு

சொத்து பத்திரப் பதிவுகள், நில ஆவணங்கள், கட்டுமான அங்கீகாரங்கள் பற்றி யாருக்கும் தெளிவான பார்வை கிடையாது. இத்துறைகளில் பின்பற்ற வேண்டிய சட்ட ரீதியான விழிப்புணர்வும் இல்லை. இது சம்பந்தமான பணிகளில் ஈடுபடும்போது, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் புரோக்கர்களை அணுகவே செய்கிறார்கள். நிறைய செலவு செய்து திணறவும் செய்கிறார்கள் பொதுமக்கள். சொத்துப் பதிவு, நில ஆவணங்கள், கட்டுமான அங்கீகாரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான்.

இந்தக் குறையைப் போக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டில் ‘ப்ராப்பர்டி ரிஜிஸ்ட்ரேஷன், லேண்ட் ரெக்கார்ட்ஸ் அண்ட் பில்டிங் அப்ரூவல் ப்ரொசிஜர்ஸ் ஃபாலோவ்டு இன் வேரியஸ் ஸ்டேட்ஸ் இன் இந்தியா’ என்ற நூலை வழக்கறிஞர் ஜி. ஷ்யாம் சுந்தர் எழுதினார்.

இந்தியாவில் பல்வேறு மா நிலங்களில் பத்திரப்பதிவு, வருவாய், வீடு மற்றும் நகர மேம்பாட்டுத் துறைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பற்றி அதில் எழுதியிருந்தார். இதன் இரண்டாவது பதிப்பை தற்போது ஷ்யாம் சுந்தர் வெளியிட்டுள்ளார். இந்த நூலிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சொத்துப் பத்திரப் பதிவில் பின்பற்றப்படும் வழிமுறைகள், ஆன்லைன் வசதிகள், கட்டுமான அங்கீகார விதிமுறைகள், எஃப்.எஸ்.ஐ. விகிதங்கள், கட்டுமானத்தின்போது பொதுப் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் எது எப்படி மாறுபடுகிறது என்ற விவரங்களும் இந்த நூலில் உள்ளன.

மேலும் பத்திரப் பதிவு, வருவாய், நகர ஊரமைப்புத் துறைகளில் மேம்படுத்த வேண்டிய யோசனைகள் பற்றியும் நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். விவசாய நிலச் சொத்து, நிலத்துக்கான அங்கீகார வரைபடம், புது அடுக்குமாடி மற்றும் பழைய அடுக்குமாடி வீடு, தொழிற்சாலைகளை வாங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது போல இன்னும் ஏராளமான தகவல்கள் இந்த நூலில் உள்ளன.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறை சார்ந்த விஷயங்களை அலசும் இந்த நூல் சொத்து வைத்துள்ளவர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூலாகும்.

ப்ராப்பர்டி ரிஜிஸ்ட்ரேஷன், லேண்ட் ரெக்கார்ட்ஸ் அண்ட் பில்டிங் அப்ரூவல் ப்ரொசிஜர்ஸ் ஃபாலோவ்டு இன் வேரியஸ் ஸ்டேட்ஸ் இன் இந்தியா
வழக்கறிஞர் ஜி.ஷ்யாம் சுந்தர்
விலை: ரூ.499
ஸ்ரீ வித்யா தேவி பதிப்பகம்
பழைய எண் 63, புதிய எண் 12, ஃப்ளாட் எண் 3,
முதல் தளம், நவரத்னா அபார்ட்மெண்ட்,
இரண்டாவது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை-28.
தொலைபேசி: 044-24936193



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்