வெப்பத்தைத் தாங்கும் கூரைகள்- மாற்றுக் கட்டுமானப் பொருள்கள்

By குமார்

கட்டுமானத் துறையில் இன்றைக்குப் புதிய புதிய பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுவருகின்றன. அதிகரித்துவரும் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில்லை.

அதுபோல தேவை அதிகமாக, அதிகமாகக் கட்டுமானப் பொருள்களின் விலையும் கூடிக்கொண்டே போகும். ஆற்று மணலுக்கு மாற்றாகச் செயற்கை மணல், செங்கலுக்கு மாற்றாக ஏசிசி கற்கள் எனப் பலவிதமான மாற்றுப் பொருள்கள் இன்றைக்குச் சந்தையில் கிடைக்கின்றன. கட்டுமானத்திலும் பயன்படத் தொடங்கிவிட்டது. இம்மாதிரியான ஒரு கட்டுமானப் பொருள்தான் பாலிகார்பனேட்.

மாற்றுப் பொருள்களை நாம் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருப்பவை அதன் சில அனுகூலமான அம்சங்கள். மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கையாள்வதற்கு எளிதானதாக இருக்க வேண்டும்.

வெப்பத்தைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும். பராமரிப்புச் செலவு குறைவாக இருக்க வேண்டும். விலை ஓரளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது போன்ற பல எதிர்பார்ப்புகளை நாம் இந்த மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் மீது குவிப்போம்.

இம்மாதிரியான சிறப்பம்சங்களை இந்த சிலிகான் பாலி கார்பனேட் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் கூரை அமைக்கப் பயன்படுகிறது. தளம் அமைக்கவும் இவை பயன்படுத்தப்படுகிறது.

பாலி கார்பனேட்டின் சிறப்பம்சங்கள் இதன் எடை தாங்கும் திறன் மிக அதிகம். எளிதாகக் கையாளக் கூடிய அளவில் இதன் எடையும் மிகக் குறைவு. இதனால் கட்டுமானத்தை பிரிப்பதும் இடம் மாற்றுவதும் எளிது. மேலும் கட்டிடத்தின் மொத்த எடையும் இதனால் குறையும்.

எடை குறைவாக இருப்பதால் கட்டுமானத்தின் உறுதி குறையும் என நினைக்க வேண்டாம். கட்டுமானத்தின் உறுதி ஸ்டீல் கூரைக் கட்டுமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும். பிறகு ஸ்டீல் கூரைகளைப் பயன்படுத்தும்போது அவை துருப்பிடிக்கும், தேய்மானமும் ஆகும். ஆனால் இந்த மாற்றுப் பொருளில் அந்தக் கவலை இல்லை. இவை துருப்பிடிக்கும் தன்மை அற்றவை.

கூரைக் கட்டுமானங்கள் மட்டுமின்றிக் கதவுகள், அலமாரிகள் போன்றவற்றின் கைப்பிடிகளையும் இதைக் கொண்டு தயாரிக்க முடியும். எடை குறைவாகவும் கையாள எளிதாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாகத் தாக்கும் வாய்ப்புள்ள கட்டிடப் பகுதிகளில் இந்த பாலி கார்பனேட் பொருள்களைப் பயன்படுத்தலாம். இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்பதால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

பாலி கார்பனேட் 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. சிலிகான் பாலி கார்பனேட், கண்ணாடி, நைலான் ஆகியவற்றைக் கலந்து பாலி கார்பனேட் தாயாரிக்கிறார்கள். பாலியெஸ்டர், பாலி அமைட் ஆகிய வேதிப் பொருள்களும் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தக் கலவையை விருப்பதிற்கேற்ப உருவாக்க குறைந்த நேரமே ஆகும். அதனால் உற்பத்திச் செலவு குறைவாகத்தான் இருக்கும். மேலும் இந்தப் பொருள்கள் இன்றைக்குச் சென்னையிலேயே உற்பத்திசெய்யப்படுகின்றன. அதனால் கிடைப்பதும் மிக எளிது.

கண்ணாடி, பிளாஸ்டிக், ஜிப்சம், ஃபைபர் போன்ற பொருட்களுக்கான பாலிகார்பனேட் சிறந்த மாற்றுப் பொருளாகும். அடுத்த பத்தாண்டுகளில் இந்தப் பொருள் கட்டுமானத் துறையில் செல்வாக்குச் செலுத்தும் எனக் கட்டிடக் கலை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

19 mins ago

இந்தியா

30 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்