உடை அலமாரியை ஒழுங்குபடுத்துவது எப்படி?

By கனி

உங்கள் உடை அலமாரி எப்படி அடுக்கிவைத்தாலும் உடனடியாகக் கலைந்துவிடுகிறதா? உடைகளை அடுக்கிவைக்கும்போது சில விஷயங்களில் கவனம் எடுத்துகொண்டால், அலமாரியைப் பராமரிப்பது எளிமையானதாகிவிடும். உடை அலமாரியைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள்…

காலத்துக்கு ஏற்ற உடைகள்

அலமாரியில் பருவநிலைக்கு ஏற்ற உடைகளை அடுக்கிவைப்பது சிறந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. பெரும்பாலும் குளிர்காலத்தில் அணியும் உடைகளைக் கோடையில் அணிய முடியாது. அதனால், குளிர்காலத்துக்கு ஏற்ற உடைகளைத் தனியாக எடுத்து ஒரு பையிலோ பெட்டியிலோ போட்டு அலமாரியின் மேல் அடுக்கில் வைக்கலாம்.

அலமாரியில் போதிய இடம் இல்லாத பட்சத்தில் அதன் மேலே வைக்கலாம். இந்த முறையை ஒவ்வொரு பருவகாலம் மாறும்போதும் தொடர்ந்து பின்பற்றினால், தினசரி காலையில் உடைத் தேர்வில் செலவிடும் நேரத்தைப் பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

உடை வகை

உடைகளை அவற்றின் வகைப்படி அடுக்கிவைத்தால் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். அலுவலுக்குப் பயன்படுத்தும் ‘ஃபார்மல்’ உடைகள், வீட்டில் பயன்படுத்தும் ‘கேஷுவல்’ உடைகள், விழாக்களுக்குப் பயன்படுத்தும் உடைகள் போன்றவற்றைப் பிரித்து அலமாரிகளில் தனித்தனியாக அடுக்கிவைத்துகொள்ளலாம்.

அதேமாதிரி, உடைகளைப் பருத்தி, நைலான், அதிக எடை, குறைவான எடை போன்றவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்தி அடுக்கிவைக்கலாம். சட்டைகளை முழுக் கைச் சட்டைகள், அரைக் கைச் சட்டைகள் எனப் பிரித்து அடுக்கிவைக்கலாம்.

நிறங்கள்

உடைகளை அவற்றின் வகைப்படி பிரித்த பிறகு, அடுத்த கட்டமாக அவற்றை நிறங்களின் அடிப்படையில் பிரித்து அடுக்கலாம். ஒவ்வொரு வகையான உடையையும் அடர்நிறத்திலிருந்து மென்நிற வரிசையில் அலமாரியில் அடுக்கலாம். உங்கள் உடை அலமாரியை மேலும் சிறப்பாக ஒழுங்கமைக்க விரும்பினால், உடைகளின் அமைப்புகளாக இடம்பெற்றிருக்கும் கோடுகள், பூக்கள் போன்றவற்றின் அடிப்படையிலும் அடுக்கலாம்.

இந்த உடையை வாங்குவீர்களா?

இப்படி அலமாரியில் உடைகளை அடுக்கிவைத்தவுடன், அடுத்தகட்டமாக அவற்றிலிருந்து தேவையற்ற உடைகளை நீக்க முடியும். இந்த உடையைக் கடையில் இன்று பார்த்தால் நீங்கள் வாங்குவீர்களா? என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுகொள்ளுங்கள். இந்தக் கேள்விக்கு இல்லை, ஒருவேளை வாங்கலாம் என்று பதிலளித்தால், அந்த உடையை அலமாரியிலிருந்து நீக்கிவிடுங்கள்.

என்றாவது ஒரு நாள், இந்த உடையை அணிவேன், இந்த உடை என் மனதுக்கு நெருக்கமானது போன்ற காரணங்களால் நீண்ட காலமாக அலமாரியில் தேவையற்ற உடைகளைத் தேக்கிவைக்க வேண்டாம். ஓர் ஆண்டுக்கு மேலாக ஓர் உடையை நீங்கள் அணியாமல்  இருந்தால்  அதை அலமாரியில் வைத்திருக்க வேண்டாம்.

மடிக்க வேண்டியவை

ஹேங்கரில் மாட்ட முடியாத உடைகளை மடித்து உடை அலமாரியிலோ வெளியிலிருக்கும் அலமாரியிலோ அடுக்கிவைக்கலாம். பெரும்பாலும் கேஷுவலான உடை களை இப்படி அடுக்கிவைக்கலாம்.

மற்ற பொருட்கள்

ஷால்கள், பைகள், உடைகளுக்கேற்ற காலணிகள், தொப்பிகள் போன்றவற்றையும் நிறங்கள் வாரியாக அலமாரியிலோ அட்டைப் பெட்டியிலோ போட்டு அடுக்கிவைக்கலாம். இப்படி அடுக்கி வைப்பதால், பொருட்கள் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்