எட்டு விதமான வீட்டுக் கடன்கள்

By கனி

இந்தியாவில் நிதி நிறுவனங்கள் பலவிதமான வீட்டுக் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, பழைய வீட்டை விரிவாக்கமோ சீரமைக்கவோ செய்வதாய் இருந்தாலும் தற்போது வங்கிகள் அதற்கான பிரத்யேகமான வீட்டுக் கடன்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன. வங்கிகள் வழங்கும் பல விதமான வீட்டுக் கடன்களைப் பற்றிய தொகுப்பு.

பொதுவாக, புதிதாக வீடு வாங்குபவர்கள் அனைவருமே வாங்கும் கடன் வீடு வாங்குவதற்கானது. நாட்டின் முன்னணி வங்கிகள் அனைத்துமே இந்தப் புது வீடு வாங்குவதற்கான கடனை வழங்குகின்றன. வீட்டின் மதிப்பில் 75 – 85 சதவீதம் வரை நீங்கள் கடனாகப் பெறலாம்.

வீட்டை மேம்படுத்துவதற்கான கடன்

உங்களது பழைய வீட்டை விரிவாக்கம் செய்வதற்கும், சீரமைப்பதற்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்தக் கடனை வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என இரண்டையும் சீரமைக்கப் பயன்படுத்திகொள்ளலாம். இதற்கான பணி மதிப்பீட்டில் 80 – 90 சதவீதம் வரை நீங்கள் கடனாகப் பெற முடியும். 

வீட்டைக் கட்டுவதற்கான கடன்

புது வீட்டைக் கட்டுவதற்கான நிதி தேவை இருப்பவர்களுக்கும் வங்கிகள் கடன்கள் வழங்குகின்றன. மற்ற பொதுவான  வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களில்தான் இந்த வீட்டைக் கட்டுவதற்கான கடனையும் வங்கிகள் வழங்குகின்றன.

வீட்டை மாற்றும் கடன்

வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்கள், மீண்டும் புதிதாக இன்னொரு வீட்டை வாங்குவதற்குக் கூடுதல் கடன் தொகைத் தேவைப்படுபவர்கள் வீட்டை மாற்றும் (Home Conversion) கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாகப் பெறும் புதிய கடன்தொகையுடன் ஏற்கெனவே மீதமிருக்கும் பழைய கடன்தொகை சேர்க்கப்படும்.

ஆனால், இந்தக் கடன் பெரும்பாலும் இரண்டாவது வீட்டை வாங்குவதற்காக இருப்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதலான வட்டி விகிதங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

இடம் வாங்குவதற்கான கடன்

வீட்டைக் கட்டுவதற்காகவோ முதலீடு செய்வதற்காகவோ இடம் வாங்க நினைப்பவர்கள் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். முதலீடு செய்வதற்காகவோ வீடு கட்டுவதற்காகவோ விவசாய நிலத்தை வாங்க நினைப்பவர்களுக்கு வங்கிகள் இந்தக் கடனை  வழங்காது. நாட்டின் முக்கிய வங்கிகள் அனைத்தும் இந்தக் கடனை வழங்குகின்றன.

பொதுவாக வாங்கப்படும் வீட்டுக் கடனின் காலகட்டத்தைவிட இந்தக் கடனை 5 – 15 ஆண்டுகளில் அடைத்துவிட வேண்டியிருக்கும். அதனால், இந்தக் கடனுக்கான மாதத் தவனை அதிகமாக இருக்கும். இடத்தின் மதிப்பில் 60 சதவீதம் – 75 சதவீதம் வரை இதற்கு வங்கிகள் கடன் வழங்கும். இந்தக் கடனைப் பெறுவதற்கு 30-35 சதவீதத்தை நீங்கள் முன்பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். மற்ற வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைப் போலவேதான் இதற்கும் வட்டிவிகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

பிரிட்ஜ் கடன்

ஏற்கெனவே வசித்துவரும் வீட்டை விற்றுவிட்டுப் புதிதாக வீட்டை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ‘பிரிட்ஜ்’ (Bridge) கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பழைய வீட்டை விற்றுப் புது வீடு வாங்குவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்க இந்த ‘பிரிட்ஜ்’ கடன் உதவும். இது குறுகிய காலக் கடன் என்பதால், இந்தக்  கடன் மற்ற வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களைவிட அதிகமாக இருக்கும்.

இந்தக் கடனைப் பெறுவதற்கு உங்கள் புதிய சொத்து பற்றிய தகவலை வங்கியிடம் கொடுக்க வேண்டியிருக்கும். இந்தக் கடனைப் பெற்ற ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் உங்கள் பழைய வீட்டை விற்க முடியவில்லை என்றால், இந்தக் கடனை உங்கள் வங்கி கூடுதலான வட்டி விகிதங்களுடன் அடமானக் கடனாக மாற்றிவிடும்.

இருப்புப் பரிமாற்ற வீட்டுக் கடன்

இருப்புப் பரிமாற்ற வீட்டுக் கடனை (Balance Transfer Home Loan)  வாடிக்கையாளர்கள் சந்தையில் குறைவான வட்டி விகிதங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். வீட்டுக் கடன் மூலம் ஏற்கெனவே வீடு வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் அந்தக் கடனை வேறொரு வங்கிக்கு மாற்றும்போது குறைவான வட்டிவிகிதத்தைப் பெறமுடியும். வட்டிச் சுமையைத் தவிர்க்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

முத்திரை வரிக் கடன்

சொத்தைப் பதிவுச் செய்வதற்காக ஆகும் செலவைக் குறைப்பதற்காக முத்திரை வரிக் கடனை (Stamp Duty Loan) வங்கிகள் வழங்குகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

32 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

40 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

46 mins ago

ஆன்மிகம்

56 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்