கட்டிட உலகின் ராணி

By ஜி.எஸ்.எஸ்

லகின் தலைசிறந்த பெண் கட்டிடக் கலைஞர் என்று அறியப்பட்டவர் ஜாஹா ஹாடித். அரபுப் பின்னணியில் பிறந்தவர் என்பதும், பிரிட்டனில் படித்தவர் என்பதும் இவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டின. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் இன்ஸ்டிட்யூட் என்ற உலகப் புகழ் பெற்ற அமைப்பிடமிருந்து ‘ராயல் தங்கப் பதக்கம்’ பெற்ற முதல் பெண் இவர்தான் (ஒரே பெண்ணும் இவர்தான்). மிக வித்தியாசமான பல கட்டிடங்களை வடிவமைத்த இவர் ‘வளைவு ராணி’ (Queen of the curve) என்றும் வர்ணிக்கப்பட்டார்.

பாக்தாதைச் சேர்ந்த ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். தொழிலதிபரான இவர் தந்தைக்கு அரசியல் தொடர்பும் இருந்தது. ஈராக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். நிதி அமைச்சராகவும் விளங்கியவர். ஜாஹாவுக்கான கலைத்தன்மை ஒருவேளை அவரது அம்மாவிடமிருந்து வந்திருக்கலாம். வஜிஹா என்ற பெயர் கொண்ட அவர் ஓர் ஓவியர்.

லண்டனிலுள்ள கட்டிடக் கலைக் கல்லூரியில் (Architectural Assocaition School of Architecture) ஜாஹா படித்தார். 1980-ல் தானாகவே ஒரு கட்டிடக் கலை நிறுவனத்தையும் தொடங்கினார். ஆனால், இவரது வடிவமைப்புகள் பிறரால் பிரமிப்புடன் பார்க்கப்பட்டன. மிக வித்தியாசமானவை என்று பாராட்டப்பட்டன. வடிவங்களிலும் வண்ணங்களிலும் அவர் காட்டிய புதுமைகள் பெரிதும் கவனம் ஈர்ப்பதாக இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட நெடுங்காலத்துக்குக் கட்டிடமாக வடிவம் பெறவில்லை என்பது சோகம். ஆக, கட்டிடக் கலை தொடர்பான விரிவுரைகளை ஆற்றத்தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

“பெண் கட்டிடக் கலைஞராக இருப்பது எப்படியிருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு, ‘எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் ஆணாக இருந்ததில்லை’ என்றுதான் பதிலளிப்போன். மற்றபடி பிற பெண் கட்டிடக் கலைஞர்களுக்கு நான் ஒரு உந்துசக்தியாக இருக்கிறேன். இது மகிழ்ச்சிதான்” என்கிறார் ஹாதித்.

இவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. ‘அவர் ஒரு காலிப் பானை’ என்று கூறியவர்கள் உண்டு. ஜாஹாவின் பிடிவாதமான போக்கும் தன் வடிவங்களை அவர் சமரசத்துக்கு உட்படுத்தாததும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

hadidright

அவர் வடிவமைத்த கட்டிடங்களை விளக்குவதைவிடப் பார்த்து அனுபவிப்பது பொருத்தமாக இருக்கும். அவரது கற்பனையில் உருவான ஜெர்மனியிலுள்ள விட்ரா தீயணைப்பு நிலையம், ஜெர்மனியிலுள்ள ஃபேனோ அறிவியல் மையம், இத்தாலியில் உள்ள அதிவேக ரயில் நிலையம், ஸ்பெயினிலுள்ள பெவிலியன் பாலம், சீனாவிலுள்ள இசை அரங்கம், நீர் விளையாட்டுகளுக்காக லண்டனில் 2012 ஒலிம்பிக்ஸின்போது உருவாக்கப்பட்ட நீர் விளையாட்டு மையம், வியன்னா பல்கலைக்கழக நூலகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

2016-ல் இவர் இறந்த பிறகு அவர் கற்பனையில் உருவாகி வடிவமைக்கப்பட்ட கப்பல் நிறுத்தம் (இத்தாலி) முழுமை பெற்றது. இன்னவகையில் இவரது கட்டிடங்கள் இருக்குமென்று பிரித்தறிய முடியாதபடி ஒரு பாணியை (பல பாணிகளை) இவர் அறிமுகப்படுத்தினார். அதுவே அவரது தனித்துவம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்