பழங்குடியினப் பெருமை

By செய்திப்பிரிவு

பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவர் வேட்பாள ராக அறிவித் துள்ளது பாஜக கூட்டணி. 64 வயதாகும் திரௌபதி ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தவர். சமூகப் புறக்கணிப்பும் வறுமையும் சூழ வளர்ந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் பள்ளியொன்றில் ஆசிரிய ராகப் பணியாற்றினார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினக் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என உணர்ந்தவர், அந்தப் பள்ளியில் ஊதியமின்றிப் பணியாற்றினார். பிறகு ஒடிசா அரசாங்கத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார்.

1997இல் பாஜகவில் இணைந்ததன் மூலம் திரௌபதி முர்முவின் அரசியல் பயணம் தொடங்கியது. அதே ஆண்டு ராய்ரங்கபூர் நகர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவின் பழங்குடியினப் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். படிப்படியாக உயர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரு முறை வென்றார். பாஜக – பிஜு ஜனதா தளக் கூட்டணி ஆட்சியின்போது வணிகம் – போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் மீன்வளம் – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்