குறிப்புகள் பலவிதம்: பளிச் முகத்துக்குப் பால்!

By செய்திப்பிரிவு

# மழைக்காலங்களில் இட்லி மாவு சீக்கிரம் புளிக்காது. அதனால் இட்லி மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது கனமான பாத்திரம் வைத்து, காற்றுப் புகாமல் பார்த்துக்கொண்டால் விரைவில் புளித்துவிடும்.

# ஊதுபத்தியைத் தண்ணீரில் நனைத்து ஏற்றிவைத்தால் நீண்ட நேரம் எரியும்.

# மிகவும் அழுக்கான துணிகள், பெட்ஷீட் போன்றவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது முதலில் வெறும் தண்ணீரில் அலசிவிட்டுப் பிறகு சோப்பு பவுடர் போட்டுத் துவைத்தால் அழுக்கு நன்றாக நீங்கும்.

# ஷாம்பு தேய்த்துக் குளிப்பவர்கள் ஷாம்புவை நேரடியாகத் தலையில் தேய்க்காமல் அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து தேய்ப்பது கூந்தலுக்கு நல்லது.

# சிறு தானியங்களை வைத்து விதவிதமாகச் சமைக்கத் தெரியாதவர்கள், இட்லி, தோசைக்கு ஊறவைக்கும் அரிசியின் அளவைக் குறைத்து அதற்குப் பதில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

# சாம்பாருக்கு துவரம் பருப்புடன் 1 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் நீண்ட நேரம் கெடாது. சுவையும் வித்தியாசமாக இருக்கும், உடம்புக்கும் நல்லது.

# வாரம் ஒரு முறையோ இரு முறையோ ஸிங்க், வாஷ் பேஸின் போன்றவற்றின் சல்லடை துவாரத்தில் ப்ளீச்சிங் பவுடரை இரவு போட்டுவைத்து, மறுநாள் காலை வெந்நீர் ஊற்றினால் கெட்ட வாடை நீங்கும். அடைப்பு இருந்தால் சரியாகிவிடும்.

# காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகம், கழுத்துப் பகுதிகளில் தேய்த்துவிட்டு பிறகு ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று மாறும்.

- எஸ். மேகலா, சென்னை-18.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்