இப்போ இதுதான் பேச்சு: தற்சார்புடன் நிற்கும் ‘பெண்மொழி’

By ப்ரதிமா

நீங்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக உலவுகிற வர்களாக இருந்தால் Womyn, Womxn ஆகிய இரண்டு சொற்களைக் கடந்துவந்திருக்கலாம். சட்டென்று பார்க்கும்போது சொற்பிழை என்றுகூடத் தோன்றலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பெண்ணியவாதிகள் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் இந்தச் சொற்கள் தற்போது அதிகமாகக் கையாளப்படுகின்றன.

எப்போதும் ஆணைச் சார்ந்து இருப்பவர்கள்தாம் பெண்கள் என்று சொல்லப்பட்டுவருவதை உறுதிப்படுத்தும்விதமாக மொழியும் ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பாலானவை ஆணையோ ஆண்பாலையோ மையப்படுத்தி உரு வாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல.

சொற்களிலும் பாகுபாடு

ஆசிரியர், நடிகர், இளைஞர், கவிஞர், மருத்துவர் போன்ற பல சொற்கள் இருபாலரையும் குறிக்கும் என்றாலும், அந்தச் சொற்களைக் கேட்டதுமே நம் மனம் ஓர் ஆணைத்தான் கற்பனை செய்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது விவசாயி, விஞ்ஞானி என்பது போன்ற சொற்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. ஆங்கிலத்தில் பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் Woman, Women ஆகிய இரண்டும் ஆணைக் குறிக்கும் Man, Men போன்றவற்றைப் பின்னொட்டாகக் கொண்டிருக்கின்றன. சொல்லில் கூட ஆணை மையமாக வைத்துத்தான் குறிப்பிட வேண்டுமா என நினைத்த பெண்ணியவாதிகள் சிலர், ஆணைக் குறிப்பிடும் சொல்லைத் தவிர்க்கும் விதமாக Womyn என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது பெண்களை மட்டும் பிரத்யேகமாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. 1975-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சொல், ஒத்த சிந்தனையுடைய பெண்ணியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தச் சொல் கறார்தன்மைகொண்டது. அதாவது திருநங்கையர் இந்தச் சொல் மூலம் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளக் கூடாது. அவர்கள் பிறப்பால் ஆண் என்பதே இதற்குக் காரணம்.

அதனால், மாற்றுப்பாலினத்தோர், தன்பால் ஈர்ப்பு கொண்டோர் ஆகியோ ரையும் பெண்கள் என்கிற குடையின் கீழே கொண்டுவரும் வகையில் Womxn என்ற சொல்லைப் பின்னாள்களில் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது பெண்ணியவாதிகள் மட்டுமல்லாமல், சொல்லில்கூட ஆணைச் சார்ந்திருக்க விரும்பாதோர் அனைவரும் தங்களை Womxn என்றே அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர்.

இந்தச் சொல்லை உச்சரிப்பதில் உள்ள சிக்கலையும் இவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், அதற்காக அடையாளத்தில்கூட ஆணைச் சார்ந்துதான் இருக்க வேண்டுமா என்பது இவர்களின் வாதம். ஆண்டுதோறும் புதுப்புது சொற்களுக்கு இடமளிக்கும் அகராதி, பெண்களைக் குறிக்கும் இந்தச் சொல்லையும் ஏற்றுக்கொள்ளும் என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆண்களின் ‘சிந்தனை’

பெண்கள் இப்படிப் புதிய சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் தங்கள் பங்குக்குப் புதிய சொல்லைக் கண்டறிந்திருக்கின்றனர். அதையும் வழக்கம்போல் பெண்களை ஒடுக்கத்தான் பயன்படுத்துகிறார்கள். உங்களைப் பெண்ணியவாதி என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலோ பாலினப் பாகுபாடு, பெண்ணுரிமை போன்றவற்றைப் பற்றிப் பேசினாலோ சமூக ஊடகங்களில் பெண்ணியம் சார்ந்து எழுதினாலோ உங்களுக்கு FemiNAZI என்கிற பட்டம் பெண் வெறுப்பு கொண்ட ஆண்களால் சூட்டப்படுகிறது. பெண்ணியத்தையும் ஹிட்லரின் நாஜிப்படையின் கொள்கையையும் இணைத்து அவர்கள் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது, பெண்கள் பேசும் பெண்ணியம் நாஜிக் கொள்கையைப் போன்றது என்று பொருளாம்! அதீதப் பெண்ணியம் என்று இந்தச் சொல்லுக்கு விளக்கமும் வைத்திருக்கிறார்கள். பெண்ணியம் பேசும் பெண்களை அவமானப்படுத்துவதுடன் அவர்களின் நோக்கத்தையும் செயல்பாட்டையும் இந்தச் சொல் கேள்விக்கு உள்ளாக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களின் உரிமைக் குரலை அடக்க முயல்கிறது. பெண்கள் இதையும் கடந்துதான் வந்தாக வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்