பேசும் படம்: இன்ஸ்டாகிராமில் பெண் அறிவியலாளர்கள்

By செய்திப்பிரிவு

அக் ஷயாசமூக வலைத்தளங்களுக்குப் பலரும் அடிமையாகி இருப்பதாகப் புள்ளி விவரங்கள் எச்சரிக்கை மணி அடிக்கும் வேளையில் அவற்றைப் பயனுள்ள காரணங்களுக்காகப் பயன்படுத்துவோரும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். நினா சிட்டா, தன் இன்ஸ்டாகிராம் கணக்கை அப்படித்தான் பயன்படுத்துகிறார். ஓவியரான இவர், பெண் அறிவியலாளர்களை மக்கள் அறிந்துகொள்வதற்கான தளமாக இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திவருகிறார்.

ஆங்கிலத்தில் ‘ஸ்டெம்’ (STEM) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் ஆகிய நான்கு துறைகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் பெண் அறிவியலாளர்களைச் சித்திரமாக வரைந்து, அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் நினா பதிவிடுகிறார்.

மருத்துவ எழுத்தாளராகப் பணியாற்றும் நினா, பாத் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி உயிரியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கிறார். தன் கல்விப் பின்னணி யின் விளைவாக இயல்பாகவே அறிவிய லாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார். வரையப் போகும் அறிவியலாளரைக் குறித்த தகவல்களைச் சேகரிப்பதுடன் காணொலிக் காட்சிமூலம் அவர்களுடன் உரையாடி அவர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்கிறார்.

அதன் பிறகே வரையத் தொடங்குகிறார். தயாரிப்புக்குத்தான் அதிக நேரம் எடுக்கும் என்றும், அந்த நபரின் துறை சார்ந்த தகவல்களைச் சித்திரத்தில் துல்லியமாகத் தருவதற்கு மிகவும் மெனக்கெடுவதாகவும் நினா கூறுவதை அவரது சித்திரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

நினா சிட்டாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் காண:
https://www.instagram.com/nina.draws.scientists

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்