உலக இதய நாள்: செப் 29 - கொழுப்பைக் குறைத்து இதயம் காப்போம்

By செய்திப்பிரிவு

அன்பு

கையளவே இருக்கும் இதயம்தான் உடலின் இயக்கத்துக்கு ஆதாரம் எனச் சொல்லத் தேவையில்லை. பெருகிவரும் வாழ்க்கை சார்ந்த நெருக்கடிகளால் பலரும் சிறு வயதிலேயே இதய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி ‘உலக இதய நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதயம் தொடர்பான பிரச்சினைகளால் மரண மடைகிறார்கள். அதில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி.

# உடல் பருமன்
# உயர் ரத்த அழுத்தம்
# நீரிழிவு
# மாதவிடாய்ச் சுழற்சி நின்ற பெண்கள்
# மன அழுத்தம்

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகப்பது, போன்றவை இதயம் சார்ந்த பாதிப்புகள் வர முக்கியக் காரணங்கள். குறிப்பாக, மாதவிடாய்ச் சுழற்சி நின்ற பெண்கள், சுழற்சி நிற்கும் தறுவாயில் உள்ள பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். மாதவிடாய்ச் சுழற்சி நிற்பதால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் அடிக்கடி பதற்றமாகிவிடுவார்கள்.

இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம் உண்டாகி திடீர் மாரடைப்பு வரக்கூடும். இந்த வயதில் உள்ள பெண்கள் ஏதாவது பிரச்சினைகளின்போது “என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கே” என்பார்கள். 40 வயதுக்குமேல் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தவில்லை என்றால் அது உண்மையாகவே நிகழ்ந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வயதானால் கவனம் தேவை

நீரிழிவு இருக்கும் பெண்கள் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுபோல் இதய நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். நீரிழிவு நோய் உள்ள 60 சதவீதத்தினரை மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற பிரச்சினைகள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. “பொதுவாகப் பெண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதுபோல் நினைத்துக்கொள்வார்கள்.

சாதாரண உடல் பரிசோதனைக்கு அழைத்தால்கூட ‘நான் நல்லாதான் இருக்கேன்’ என்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் முப்பது வயதில் உள்ள பெண்களுக்கே திடீர் மாரடைப்பு போன்றவை ஏற்படுகின்றன. நீரிழிவு, ரத்த அழுத்தம் இல்லையென்றாலும் பெண்கள் பலர் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள்.

இதயத்தில் உள்ள சிறு ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களைவிடப் பெண்களையே இந்தப் பிரச்சினை அதிக அளவு தாக்குகிறது.
பொதுவாக இ.சி.ஜி, எக்கோ போன்ற பரிசோதனைகளின்போது இந்த அடைப்பு தெரியாது. தொடர்ந்து மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வது அவசியம்” என்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் க. கார்த்திகேயன்.

பரிசோதனை அவசியம்

பருமனாக உள்ளவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்பதில்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் வரக்கூடும். ரத்தத்தில் கொழுப்பின் அளவைச் சீராக வைத்துக்கொள்வது அவசியம். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இதயம் சார்ந்த பரிசோதனையை இலவசமாகச் செய்துகொள்ளும் வசதி உள்ளது. அதைச் சரியான விதத்தில் பயன்படுத்திக்கொண்டால் இதயமும் தடங்கலின்றிச் செயல்படும்.

செப்டம்பர் 27, சர்வதேச சுற்றுலா தினம்

இந்திய மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறது; யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இந்தியாவில் இருக்கும் 29 இடங்களில், 4 தமிழகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

28 mins ago

வாழ்வியல்

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்