கண்ணீர் வராத வெங்காயம்

By செய்திப்பிரிவு

# ஊறுகாய் பாட்டிலில் சில்வர் ஸ்பூன் போட்டு வைக்கக்கூடாது. அப்படிப் போட்டு வைத்தால், ஊறுகாய் விரைவில் கெட்டுப்போய்விடும்.

# ரஸ்னா, சர்பத் கலக்கும்போது இரண்டு ஸ்பூன் தேன் விட்டுக் கலந்தால் சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

# பழைய வெள்ளி ஆபரணங்களைச் சில மணி நேரம் மோரில் போட்டுவைத்தால், பளிச்சென மாறிவிடும்.

# கண்ணாடி மேஜை கறையாக உள்ளதா? கடலை மாவு அல்லது டால்கம் பவுடரைத் தூவிப் பிறகு நன்றாகத் துடைத்துவிடுங்கள். கறை நீங்கிவிடும்.

# வாஷ்பேஸினில் கறை படிந்துள்ளதா? கொஞ்சம் வினிகரைத் தெளித்து சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் கழுவினால் பளபளக்கும்.

# வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வராது. தோலையும் எளிதில் உரிக்க முடியும்.

# பருப்புப் பொடியுடன் சிறிது கசாகசாவையும் வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்பு, கூட்டு கெட்டியாக இருக்கும்.

# பொரியல் செய்யும்போது காரப்பொடிக்குப் பதிலாகத் தேங்காய்ப் பொடி சேர்த்தால் பொரியலின் சுவை கூடுதலாக இருக்கும்.

- எஸ். மேகலா, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

38 mins ago

விளையாட்டு

53 mins ago

சினிமா

55 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்