கண்ணீரும் புன்னகையும்

By ஷங்கர்

வழக்கறிஞருக்கும் ஆபத்து

பா

லியல் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் உள்ளான காஷ்மீர் மாநிலம் கதுவாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி தரப்பு வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜாவத், தன் உயிருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கதுவா சிறுமிக்காக வாதாடுவதால் தான் ‘இந்து எதிரி’ என்று முத்திரைக்கு உள்ளாகியிருப்பதாகவும் சமூக விலக்கத்தைச் சந்தித்துவருவதாகவும் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு தரக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறினார்.

“எத்தகைய சூழ்நிலையிலும் அந்த எட்டு வயதுச் சிறுமிக்கு நடந்த அநீதிக்கு எதிராகப் போராடி உரிய நீதியைப் பெற்றுத்தருவேன்” என்றும் கூறினார். கதுவாவில் நடந்த பாலியல் பலாத்காரம், படுகொலை குற்றத்தைக் காவல்துறையினர் புகாராகப் பதிவுசெய்வதை நிறுத்திவைத்த வழக்கறிஞர்கள் குறித்த விசாரணை கமிட்டியை அமைத்துள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. பாலியல் வல்லுறவு, படுகொலை குற்றச்சாட்டுக் உள்ளாகி கைதான நபர்களுக்கு ஆதரவாகப் பேரணியில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களான சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் கட்சி மேலிடத் தலையீட்டின் பேரில் பதவி விலகியுள்ளனர்.

தாய் கொடுத்த தண்டனை

பா

கிஸ்தானில் மதரசாவுக்குப் படிக்கச் சென்ற எட்டு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த மௌலவியை அந்தச் சிறுமியின் தாயே அடித்த வீடியோ சென்ற வாரம் ட்விட்டர் வழியாகப் பரவலானது. மதரசாவில் இருந்த மற்ற மதகுருக்களும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயுடன் சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவரை மதரசாவிலிருந்து வெளியேற்றினர்.

பெண் பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் விருது

மெரிக்காவில் ஹாலிவுட் சினிமா, அரசியல் மட்டத்தில் பெண்களுக்குத் தரப்படும் பாலியல் தொந்தரவுகளை ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘நியூயார்க்கர்’ பத்திரிகைகளில் வெளிப்படுத்திய கன்டோர், மேகன் டூஹே இருவருக்கும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வீன்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றங்கள்தாம் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பேசப்பட்ட செய்தியாக மாறியது. இதற்குப் பிறகுதான் வீன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பல பிரபல நடிகைகளும் தங்கள் வலிமிகுந்த அனுபவங்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார்கள். வீன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அதிகார செல்வாக்கு மூலம் சுரண்டலுக்கு உள்ளான பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதை அம்பலப்படுத்தும் ‘#மீடூ’ பிரச்சார இயக்கமும் பிரபலமானது.

இப்படிச் சொன்னாங்க

22CHSRS_ANGELA 

பெ

ண்களைப் பற்றி முரணான தகவல்கள் நிறைய எழுதப்படுவதை நான் வாசித்திருக்கிறேன். வாகனத்தைச் சரியாக நிறுத்த முடியாதவர்கள்; வரைபடத்தை ஒழுங்காகப் பார்க்க முடியாதவர்கள் என்றெல்லாம் எழுதியுள்ளார்கள். ஆண்கள், பெண்களைப் போல உணர்வுப்பூர்வமானவர்களோ உள்ளுணர்வு கொண்டவர்களோ அல்ல என்றும் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல்ரீதியான வித்தியாசங்கள் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள விரும்பினேன். அதன் மூலம் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியுமென்று நினைத்தேன். பல்வேறு விருப்பு வெறுப்புகள் ஆய்வுத் துறையிலும் உள்ளன. நரம்பியல், பரிணாம உயிரியல் என எல்லா இடங்களிலும் அவை உள்ளன. சமூக அறிவியல் இந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருகிறது. ஆனாலும், இந்த அளவு ஆழமாக விருப்பு வெறுப்பு உள்ளது என்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.

- ஏஞ்சலா சைனி, அறிவியல் பத்திரிகையாளர், நூலாசிரியர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்