குட்டிப் பார்வையாளர் (2 முதல் 5 மாதங்கள் வரை)

By ம.சுசித்ரா

புதிதாகப் பெற்றோர் ஆனவர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள்:

1.பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்ந்து பார்த்தல், தொடுதல் ஆகிய 5 ஐம்புலன்கள்-உணர்வுகள் மூலமே உலகை குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.

2.பெற்றோரின் குரல், சிரிப்பு ஆகியவற்றைப் பின்பற்றி, அதைத் தாங்களும் செய்து பார்க்கக் குழந்தைகள் குதூகலத்துடன் முயற்சி செய்வார்கள்.

3.குழந்தையை நம்முடன் அணைத்துக்கொள்ளும்போது மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் ஒருசேர உணர்வார்கள்.

சுய உணர்வு: இப்போது குழந்தை தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டு, அமைதியாவது எப்படி என்று கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.

உடல்: குழந்தை தன் உடலைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

உறவு: பெற்றோர் குழந்தையுடன் மென்மையாகப் பேசி, விளையாடினால் குழந்தைக்கு ரொம்பவும் பிடிக்கும்.

புரிதல்: சுவாரசியமான பொருள்களைக் கொடுக்கும்போது உலகை, உலகிலுள்ள பொருட்களைக் குழந்தை புரிந்துகொள்ள ஆரம்பிக்கும்.

கருத்துப் பரிமாற்றம்: குழந்தையைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி குழந்தையிடம் பேசுங்கள். குழந்தை பேசத் தொடங்கும் காலத்தில் பல சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இந்த அனுபவம் உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

21 mins ago

க்ரைம்

56 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்