சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய பனி உருண்டை! அறிவியல் கட்டுரை

By செய்திப்பிரிவு

சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக வடிவில் மிகப் பெரிய கோள் வியாழன். வியாழன் கோளின் எடை எவ்வளவு இருக்கும் தெரியுமா? சூரிய மண்டலத்தின் அனைத்துக் கோள்களின் எடையைப்போல் இரு மடங்குக்கும் மேல் எடை அதிக கொண்டது வியாழன் கோள்.
வடிவத்திலும் எடையிலும் மிகப் பெரிய வியாழன் கோளுக்குச் சந்திரன்களும் அதிகம். நாம் வசிக்கும் பூமிக்கு ஒரே ஒரு சந்திரன்தான்! ஆனால், வியாழன் கோளுக்கு 86 சந்திரன்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான ’கானிமீட்’ சந்திரன், புதன் கோளைவிடப் பெரியது. இதன் குறுக்களவு 5260 கிலோ மீட்டர்.


வியாழன் கோளை இரவு வானில் பார்க்க முடியும். ஆனால், இங்கிருந்து பார்க்கும்போது பெரிய கோளாகத் தெரியாது. சிறிய ஒளிப்புள்ளியாகத்தான் தெரியும். ஆகஸ்ட் மாதத்தில் சூரிய உதயத்துக்கு முன்னால் கிழக்கு நோக்கிப் பார்த்தால் வெள்ளி (வீனஸ்), வியாழன் (ஜூபிடர்) ஆகிய இரண்டு கோள்களும் நன்றாகத் தெரியும். இவை இரண்டில் வெள்ளி மிகப் பிரகாசமாக இருக்கும். வியாழன் சற்றுப் பிரகாசம் குறைந்ததாகக் காணப்படும்.


பூமிக்கும் வியாழனுக்கும் உள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைப் போல குறைந்தது ஐந்து மடங்கு உள்ளது. சூரியனை எட்டுக் கோள்கள் சுற்றி வருகின்றன. பூமி மூன்றாவது கோள். வியாழன் ஐந்தாவது கோள். சூரியனிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது வியாழன். இதன் காரணமாக வியாழனிலிருந்து பார்த்தால் சூரியன் சிறியதாகத் தெரியும். ஆகவே வியாழனில் சூரியனின் வெப்பம் படாது. கடுங்குளிர் வீசும். இதனால்தான் வியாழன் கோள் மிகப் பெரிய பனிக்கட்டி உருண்டையாக உள்ளது. அதாவது வியாழன் கோளில் ஆரம்ப காலத்தில் இருந்த வாயுக்கள் அனைத்தும் உறைந்துவிட்டன.


சூரிய மண்டலம் தோன்றிய காலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் போன்று சூரியனுக்கு அருகிலிருந்த கோள்களின் காற்று மண்டலத்தில் இருந்த லேசான வாயுக்கள், சூரிய வெப்பம் காரணமாக வெளியேறின. வியாழன் மிகத் தொலைவில் இருந்த காரணத்தால், வெப்பமின்றி குளிர் காரணமாக வாயுக்கள் அங்கேயே உறைந்துவிட்டன. ஆகவே தான் வியாழன் கோள் பெரிய பனிக்கட்டி உருண்டையாக உள்ளது. வியாழனுக்கு அடுத்துள்ள சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்களும் பனிக்கட்டி உருண்டைகளாகவே உள்ளன.


வியாழன் கோளில் சூரிய வெப்பம் பட்டால், பனிக்கட்டி அனைத்தும் உருகிவிடும். வியாழன் சிறிய கோளாக மாறிவிடும். ஏனென்றால் வியாழன் கோளின் மொத்த எடையில் எண்பது சதவிகிதம் உறைந்து போன வாயுக்கள் தாம் உள்ளன. அதனால்தான் வியாழன் கோளில் விண்கலத்தைத் தரையிறக்க முடியாது. அப்படியே இறக்கினாலும் உறைந்துள்ள பனிக்கட்டிக்குள் புதைந்துவிடும். எனவே வியாழனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலங்கள் அனைத்துமே வியாழனைத் தொலைவிலிருந்துதான் ஆராய்ந்துள்ளன.


வியாழன் தன்னைக் கடந்து செல்லும் வால் நட்சத்திரங்கள் மீதும் அஸ்டிராய்டுகள் எனப்படும் சிறுகோள்கள் மீதும் தன்னுடைய தாக்கத்தைச் செலுத்துகிறது. அதன் காரணமாக வால் நட்சத்திரங்களும் அஸ்டிராய்டுகளும் வியாழன் மீது மோதி அழிகின்றன. அல்லது வியாழன் கோளின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு, அதைச் சுற்றி வருகின்றன. இந்த அஸ்டிராய்டுகளுக்கு ’டிரோஜன்கள்’ என்று பெயர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

46 mins ago

உலகம்

52 mins ago

ஆன்மிகம்

50 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்