டிங்குவிடம் கேளுங்கள்: பாக்டீரியாவால் விதைகள் ஏன் சேதமடைவதில்லை?

By செய்திப்பிரிவு

மண்ணில் போடப்படும் விதைகள் மட்டும் பாக்டீரியாவால் சிதைக்கப்படாமல் முளைத்துவிடுகின்றனவே எப்படி, டிங்கு?

- எம். மருது பாண்டி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

நல்ல கேள்வி மருது பாண்டி. தாய்ச் செடி தன் சந்ததியைப் பெருக்கும் விதத்தில் விதைகளை உருவாக்குகிறது. இந்த விதைக்குள் புதிய உயிர் உருவாவதற்கான கருவும் அது வளர்வதற்குத் தேவையான உணவும் இருக்கின்றன. இந்த இரண்டையும் வெளிப்புறத் தோல் பாதுகாக்கிறது. மண்ணில் விதைகள் இடப்பட்ட பிறகு, காற்றையும் நீரையும் மட்டும் உள்ளே செல்ல தோல் அனுமதிக்கிறது. மண்ணில் இருக்கும் பெரும்பான்மையான பாக்டீரியாக்கள் மண் வளத்தைப் பெருக்கக்கூடியவை. அதனால், விதைகள் சேதமடையாமல், ஆரோக்கியமாக முளைவிட்டு வெளியே வருகின்றன, மருது பாண்டி.

மாடுகளின் கொம்புக்கு வலி தெரியுமா, டிங்கு?

- எம். காவ்யா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி,பிராட்டியூர், திருச்சி.

மாடுகளின் கொம்புக்குள் எலும்பு இருக்கிறது. அந்த எலும்புக்கு மேலே கெரட்டின் என்கிற பொருள் காணப்படுகிறது. மாடுகளின் தேவைக்குக் கொம்பு பயன்படும்போது வலி இருக்காது. ஆனால், கொம்பு உடைந்தாலோ வெட்டப்பட்டாலோ வலி தெரியும். சேதமடைந்த கொம்பு விழுந்து, மீண்டும் புதுக் கொம்பு முளைக்காது. சேதமடைந்திருந்தாலும் மாட்டின் வாழ்நாள் வரை கொம்பு வளரும், காவ்யா.

விளக்கு வெளிச்சத்தைத் தேடிச் சென்று பூச்சிகள் இறப்பது ஏன், டிங்கு?

- ம. ஷர்மிதா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இந்தக் கேள்விக்கு உறுதியான விடை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஷர்மிதா. விளக்கு வெளிச்சத்தை நோக்கிப் பூச்சிகள் செல்வதற்கான காரணங்கள் சிலவற்றைச் சொல் கிறார்கள். இரவில் நிலாவின் வெளிச்சத்தைக் கண்டு பூச்சிகள் திசை அறிந்து செயல்பட்டன. மனிதர்கள் செயற்கையாக விளக்கு ஒளியைக் கண்டுபிடித்த பிறகு, வெளிச்சத்தைக் கண்டு குழப்பமடைகின்றன. இரவில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால், வெப்பத்தை நாடி விளக்கு வெளிச்சத்தை நோக்கிச் சென்று உயிரிழக்கின்றன. ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகள் உமிழும் அகச்சிவப்புக் கதிர் என்று நினைத்து, விளக்கு வெளிச்சத்தை நாடி வருகின்றன என்கிறார்கள்.

நாட்டுக் கோழியின் முட்டை ஏன் பழுப்பாக இருக்கிறது? பழுப்பு முட்டைக்கும் வெள்ளை முட்டைக்கும் என்ன வித்தியாசம், டிங்கு?

- இ. சையத் சமி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

கோழிகளின் இனத்துக்கு ஏற்ப முட்டை ஓடுகளின் நிறம் மாறுபடுகிறது. பழுப்பு முட்டைக்கும் வெள்ளை முட்டைக்கும் சத்துகளில் பெரிய அளவுக்கு வித்தியாசமில்லை. இரண்டு முட்டைகளுக்கு இடையே ஒரே வித்தியாசம் என்றால், அது அவற்றின் விலைதான். பழுப்பு முட்டையில் சத்து அதிகம் என்று நம்புவதாலும் செய்திகள் பரப்பப்படுவதாலும் விலை அதிகமாக இருக்கிறது. வெள்ளை முட்டையின் விலை குறைவாக இருக்கிறது, சையத் சமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்