அறிவியல் மேஜிக்: எடையைத் தாங்கும் அதிசய பலூன்கள்!

By செய்திப்பிரிவு

மிது கார்த்தி

ஆணி செருப்பை அணிந்துகொண்டு நடப்பவர்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அவர்களால் எப்படி நடக்க முடிகிறது? ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா? (பெரியவர்கள் உதவியுடன் செய்யுங்கள்).

என்னென்ன தேவை?

பலூன்கள் 6
தடிமனான அட்டை
நாற்காலி

எப்படிச் செய்வது?

# ஆறு பலூன்களையும் ஒரே அளவில் ஊதிக்கொள்ளுங்கள்.
# தரையில் இரண்டு வரிசையில் 3 பலூன்களாகப் பரப்பி வையுங்கள்.
# பலூன் நகரும் என்பதால், அவை நகர்ந்து செல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
# தடினமான அட்டையை எடுத்து பலூன்களின் மீது வையுங்கள்.
# கவனம், பலூன்கள் நகராமல் இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்.
# அதன் அருகே ஒரு நாற்காலியைப் போட்டு, பிடித்துக்கொண்டு அட்டையின் மீது ஒரு காலை மெதுவாக வையுங்கள். சமநிலை செய்துகொண்டு இன்னொரு காலையும் கவனமாக எடுத்து வையுங்கள்.
# நாற்காலியிலிருந்து கையை எடுங்கள். மெதுவாக அட்டையின் மீது அழுத்தம் கொடுங்கள்.
# நீங்கள் பலூன்கள் மீது ஏறி நின்ற
பிறகும், அழுத்தம் கொடுத்த பிறகும் அவை உடையாமல் இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன காரணம்?

காரணம்

ஆறு பலூன்களின் மீது அட்டையை வைத்து ஏறி நிற்கும்போது, பலூன்கள் உங்களுடைய எடையை முழுமையாகப் பெறுவதில்லை. உங்களுடைய முழு எடையையும் அட்டை தாங்கிக்கொண்டு, அதைச் சமமாக அனைத்து பலூன்களின் மீதும் பரவச் செய்கிறது. இதனால், எடையானது பரவலாகப் பிரிந்து ஒவ்வொரு பலூன் மீதும் குறைந்த அளவிலேயே அழுத்தத்தைக் கொடுக்கிறது. அழுத்தம் பரவலாகிவிடுவதால், நீங்கள் ஏறி நின்றபோதும் பலூன் உடைவதில்லை.

பயன்பாடு

ஆணி செருப்பு அணிவது, முள் படுக்கையில் படுப்பதெல்லாம் இந்த அடிப்படையில்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்