சுட்டித்தனத்தால் வந்த தொல்லை

By ஜெய்

நீங்க உங்க வீட்டுக்குப் பக்கத்தில உள்ள பார்க் போய் விளையாடி இருக்கீங்களா? சறுக்கு விளையாட்டு, சீஸா விளையாட்டு எல்லாம் இருக்கும். அது இல்லாம உங்க ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து ஓடிப் பிடிச்சும் விளையாடுவீங்க இல்லையா? அந்த மாதிரி பார்க்கில் விளையாடும்போது அங்க விறுவிறுன்னு ஓடி விளையாடுற அணில்களைப் பார்த்திருக்கீங்களா? அந்த அணில்கள் எல்லாம் எங்க வாழுது? எப்படி வாழுது? ன்னு யோசிச்சிப் பாத்திருக்கீங்களா?

‘The Nut Job’ என்ற படத்துல அந்த மாதிரி அணில்கள் எல்லாம் சேர்ந்து ஓக்டன் என்ற ஒரு ஊரின் மத்தியில இருக்கிற லிபர்டி என்கிற ஒரு பெரிய பார்க்ல வாழுதுங்க. அந்த அணில்களுக்கு எல்லாம் தலைவன் ரக்கூன். அதுக்கு அஸிஸ்டண்டா ஒரு குட்டிப் பறவை.

கொஞ்ச நாள்ல குளிர்காலம் வரப்போகிறதுன்னு ரக்கூனுக்குத் தெரிய அது எல்லா அணில்களையும் கூப்பிட்டு, நாம குளிர்காலத்துக்கான உணவை சேமிச்சு வைக்கணும்னு கட்டளை போடுது. ஏன்னா குளிர் காலத்துல அதுங்களை வெளிய போய் உணவு தேட முடியாது.

அப்போ எல்லா அணில்களும் ஓடிப் போய் உணவு தேட ஆரம்பிச்சதுங்க. இப்படிக் கிடைக்கிற உணவு எல்லாத்தையும் ஒரு மரப் பொந்துல அணில்கள் சேமிச்சு வைக்கத் தொடங்குதுங்க. நாம வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருளான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் எல்லாம் அப்பா, அம்மா மாசம் ஒரு முறை வாங்கி வீட்ல வச்சுக்கிறாங்கல்ல அது மாதிரி. எல்லா அணில்களும் ஒழுங்கா உணவுப் பொருட்கள் தேடுற வேலைல இருந்துச்சுங்க.

சுட்டி அணில் குட்டி எலி

எல்லா அணில்களும் நல்ல பிள்ளையா இருந்தா எப்படி? உங்கள மாதிரியான சுட்டியான அணில் ஒண்ணு இருக்கும்ல. அந்த மாதிரி சுட்டியான அணில் பேரு ஸாலி. அதுக்கு ஒரு குட்டி எலி ஃப்ரண்ட். இதுங்க ரெண்டும் சேர்ந்து வால்தனம் பண்ணிட்டு அலையுங்க. ஒரு சமயம் இந்தச் சுட்டி அணிலும், எலியும் சேர்ந்து பார்க்குக்கு வெளியில, கடலை விக்கிற வண்டில இருந்து கடலையைத் திருடத் திட்டம் போட்டுச்சுங்க. கடலை வண்டிக்கு மேல இருந்த மரக் கிளையில் இருந்து கயிறு கட்டி கடலை வண்டி மேல இறங்குச்சுங்க. அந்த சமயம் பார்த்து, வண்டிக்காரர் ஒரு குட்டிப் பெண்ணை அடிச்சுடுறார். அந்தக் குட்டிப் பெண் போலீஸ கூட்டி வந்துடுது. போலீஸ்காரர் அந்த வண்டிக்காரரிடம் விசாரிக் கிறார். உண்மையிலேயே அந்த வண்டிக்காரங்க நல்ல வங்க இல்ல. பக்கத்துல இருக்கிற பேங்க்ல கொள்ளை யடிக்கிறதுக்காகத்தான் வந்திருப் பாங்க. இதைக் கதைல பின்னாடி சொல்றாங்க.

அணிலுக்குத் தண்டனை

இதைப் பயன்படுத்தி அணிலும், எலியும் கடலையைத் திருடிடுதுங்க. அப்போ அந்த வண்டிக்காரரோட நாய், அணிலையும் எலியையும் பார்த்துடுது. நாய் கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணப்போ வண்டி ப்ரேக் அறுந்து ஓட ஆரம்பிச்சுடுது. கடைசியா வண்டி, அணில்கள் உணவுப் பொருள்களைச் சேமிச்சு வைச்சுருக்க மரத்துல மோதிடுது. மோதினதும் அந்த வண்டில உள்ள கேஸ் வெடிச்சு மரமே தீப்பிடிச்சு எரியுது. நம்ம வீட்ல சமையல் பண்றதுக்காக உள்ள கேஸ் போல அந்த வண்டில கடலை வறுக்கிறதுக்காக கேஸ் இருக்கும்.

இந்தத் தப்பைச் செஞ்சதுக் காக அந்தச் சுட்டி அணிலுக்கு தண்டனை கொடுக்க எல்லா அணிலும் சேர்ந்து முடிவெடுக் குதுங்க. அந்தப் பார்க்கை விட்டே அந்த அணிலை வெளியே துரத்துதுங்க. நகரத்தில் வாழணும்ணு தண்டனை கொடுக்குதுங்க. ஜாலியா பார்க்குல இருந்து பழகிய அணிலும் எலியும் நகரத்தில் எப்படிக் கஷ்டப்படுதுங்க? அப்புறம் அந்தத் திருடர்கள் பேங்கைக் கொள்ளை அடிச்சார்களா? தெரிந்துகொள்ள ‘The Nut Job’ படம் பாருங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்