சிறுத்தையா? சிவிங்கியா?

By பிருந்தா சீனிவாசன்

குளத்து ஓரமா நடந்துபோறோம். அப்போ தண்ணிக்குள்ளே இருந்து எட்டிப் பார்க்குறது தவளையா தலைப்பிரட்டையான்னு சந்தேகம் வரலாம். டி.வியில யானைகளைப் பார்க்கிறோம். அவை இந்திய யானைகளா ஆப்ரிக்க யானைகளான்னு சின்னதா குழப்பம் வரலாம். சில விலங்குகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும். ஆனா அவை ஒரே விலங்கினமாக இருக்காது. கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சா சின்ன சின்ன வேறுபாடுகளை உணரமுடியும்.

உதாரணத்துக்கு சிறுத்தையும் (leopard) சிவிங்கிப் புலியும் (cheetah) பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டுமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டின் பழக்கவழக்கங்களும் கிட்டத்தட்ட ஒத்துப்போகும். ஆனால் இரண்டும் வெவ்வேறு விலங்குகள். அவை என்ன வேறுபாடுகள் என்று தெரிஞ்சுக்கலாமா?

சிவிங்கப் புலி

 மஞ்சள் கலந்த பழுப்பு நிற தோல் கொண்டவை.

 உடம்பில் உள்ள புள்ளிகள் கறுப்பு நிறத்திலும் வட்ட வடிவிலும் இருக்கும்.

 வட்ட முகம் கொண்டவை. இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கண்ணீர்க் கோடு போன்ற கறுப்புக் கோடு இருக்கும்.

 மெலிந்த உடலமைப்புடனும் நீண்ட கால்களுடனும் இருப்பவை. மிக வேகமாக ஓடக்கூடியவை. சிறுத்தைகளை ஓட்டத்தில் மிஞ்சக்கூடிய விலங்குகள் இல்லை.

 பகலில்தான் இவை வேட்டையாடும். இவற்றின் பாதங்கள் உள்ளிழுக்கும் அமைப்பற்றவை. அதனால் மரங்களில் ஏற முடியாது.

 பொதுவாக 80 பவுண்டு எடைக்கும் குறைவான பாலூட்டிகளை வேட்டையாடிச் சாப்பிடும். சிறு மான், ஆப்ரிக்கச் சிறு மான் போன்றவற்றை வேட்டையாடும். குழுவாக வேட்டையாடும்போது வரிக்குதிரை போன்ற பெரிய விலங்குகளை வேட்டையாடும். பொதுவாக 8 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும். இவற்றின் குட்டிகள் அம்மாவிடம் 3 மாதங்கள் வரை மட்டுமே வளரும்.

சிறுத்தை

 பெரும்பாலும் மஞ்சள் நிறத் தோல் கொண்டவை. இவற்றின் உடம்பிலும் கறுப்பு நிற வளையங்கள் இருக்கும். ஆனால் அவை முழு வட்ட வடிவில் இல்லாமல் ஆங்காங்கே உடைந்து இடைவெளியுடன் இருக்கும். வட்டத்தின் நடுவில் அடர்த்தியான பழுப்பு நிறம் இருக்கும்.

 உறுதியான, படர்ந்த முகம் கொண்டவை.

 உறுதியான, பருத்த உடலுடனும் குட்டையான கால்களுடனும் இருக்கும்.

 ஓட்டத்தில் இவை சிறுத்தைகளைவிட வேகம் குறைவானவை.

 இரவில் வேட்டையாடும். சிவிங்கிப் புலிகளிடம் இன்னொரு வித்தியாச குணமும் உண்டு. இவை தாங்கள் வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்குக் கொண்டு சென்று சாப்பிடும்.

 இவற்றின் பாதங்கள் பூனையின் பாதங்களைப் போல உள்ளிழுக்கும் அமைப்பு கொண்டவை. அதனால்தான் மரங்களில் எளிதாக ஏற முடிகிறது.

 இவற்றின் உணவுப் பட்டியல் பெரியது. பெரிய சாண வண்டுகளில் தொடங்கி எருது போலப் பெரியதாக இருக்கும் மான் போன்ற பெரிய விலங்குகள் வரை வேட்டையாடி உண்ணும். 12 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும். இவற்றின் குட்டிகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அம்மாவிடம் வளரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்