தினுசு தினுசா விளையாட்டு: ஜோடி எங்கே கண்டுபிடி!

By மு.முருகேஷ்

சேர்ந்து விளையாடும் விளையாட்டு என்றால், நீங்கள் உங்களுக்குப் பிடித்த நண்பர்களோடு மட்டுமே ஜோடி சேர்வீர்கள் அல்லவா? இப்படி விளையாடினால் உங்களுக்குப் பிடித்த நண்பருடன் மட்டுமே சேர்ந்து விளையாட முடியும். இதனால், விளையாடும் மற்ற நண்பர்களோடு நல்ல நட்பும் உறவும் ஏற்படாத நிலை வந்துவிடும் இல்லையா?

இதை எப்படித் தவிர்ப்பது? அதற்காகத்தான் ஒவ்வொரு முறையும் ‘சாட் பூட் திரி’போட்டோ, ‘உத்தி’ பிரித்தோ ஜோடி சேர்க்கிற பழக்கம் விளையாட்டுகளில் உள்ளது. இதனால், எல்லாக் குழந்தைகளோடும் பழகுகிற வாய்ப்பும் கிடைக்கும். இனி, ஜோடி பிரிக்கும்போது இதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி, இந்த வாரம் நீங்கள் ஜோடி சேர்ந்து விளையாடப் போகும் விளையாட்டு, ‘ஜோடி எங்கே கண்டுபிடி!’

இந்த விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாட முடியும். முதல் போட்டியாளர் ஒருவரைத் தவிர்த்து, மற்ற எல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கையும் இரட்டைப் படையில் இருக்க வேண்டும்.

எப்படி விளையாடுவது?

# விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்னதாக, ‘சாட், பூட், திரி…’ மூலம் போட்டியாளரைத் தேர்வு செய்துகொள்கிறீர்களா?

# மற்ற குழந்தைகள் அனைவரையும், இருவர் இருவராக உத்தி பிரித்து, சம எண்ணிக்கையில் இரண்டு குழுக்களைப் பிரியுங்கள்.

# இரு குழுக்களிலிருந்தும் தலா ஒருவரை குழுத் தலைவராகத் தேர்வு செய்யுங்கள். முதல் குழுத் தலைவர் தன் குழுவில் உள்ள எல்லோருக்கும் 1, 2, … என எண்ணை அடையாளமாக வையுங்கள். யாருக்கு என்ன எண் என்று இரண்டாம் குழுவுக்குத் தெரியாது.

# இப்போது, இரண்டாம் குழுவில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லுங்கள். அந்த எண்ணை அடையாளமாகக் கொண்டவர், அவரோடு ஜோடி சேர்ந்துகொள்ளுங்கள். (உதாரணமாக 15 குழந்தைகள் இருந்தால் 1 முதல் 15 வரை எண்களை வைக்கவும். இந்த 15-க்குள் ஆளாளுக்கு ஒரு எண்ணைச் சொல்லி ஜோடி சேர்க்கவும்.)

# பிறகு, பெரிய வட்டம் ஒன்றையும் அதற்குள் சிறிய வட்டமொன்றையும் போடுங்கள். முதல் குழுவினர் பெரிய வட்டத்திலும் இரண்டாம் குழுவினர் சிறிய வட்டத்திலும் நின்றுகொள்ளுங்கள்.

# சிறிய வட்டத்தின் நடுவே நிற்கும் முதல் போட்டியாளர் விசில் ஒலியை எழுப்புவார். உடனே, முதல் குழுவினர் இட வலமாகவும், இரண்டாம் குழுவினர் வல இடமாகவும் வட்டத்திற்குள்ளேயே சுற்றியபடி ஓடுங்கள்.

# மீண்டும் முதல் போட்டியாளர் விசில் சத்தத்தை எழுப்பியதும், இரண்டாம் குழுவினர் சட்டென ஓடுவதை நிறுத்தி, முதல் குழுவிலுள்ள தன் ஜோடியோடு கைகோத்து நில்லுங்கள்.

# அதற்குள், முதல் போட்டியாளர் வேகமாய் ஓடிச் சென்று, முதல் குழுவிலுள்ள ஏதாவது ஒரு ஜோடியின் கையைப் பிடித்து, நிற்பார்.

# முதல் போட்டியாளர் கையைப் பிடித்துவிட்டால் இரண்டாவது வட்டத்திலுள்ள அவரது ஜோடி, இப்போது ‘அவுட்’.

‘அவுட்’ ஆனவர் முதல் போட்டியாளராக மாற, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுங்கள்.

என்ன, விளையாடலாமா?

இன்னும் விளையாடலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்