கீரியா, பாறு கழுகா?

By ஜெய்

கீரிப் பிள்ளை தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் பெரிய அணில் மாதிரி இருக்கும் ஒரு விலங்கு இது. நீங்கள் கோடு போடப் பயன்படுத்தும் ஒரு முழு அடி ஸ்கேல் அளவு உயரம் இருக்கும். அதாவது 30 சென்டி மீட்டர். 500 கிராம் எடை கொண்டிருக்கும்.

இந்தக் கீரிப் பிள்ளைகளில் இதைவிடவும் பெரியதாகவோ சிறியதாகவோ பல வகை உள்ளன. இந்தியாவில் உள்ளவை சாம்பல் நிறக் கீரிப் பிள்ளைகள். கீரிப் பிள்ளைகள், சிறு பூச்சிகள், பறவை முட்டை, பல்லி, செடிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடும். மண்ணுக்கு அடியில் குழி தோண்டி அதை வீடாக அமைத்துக்கொள்ளும். இதை ‘வளை’ என்று சொல்வோம். தென்னாப் பிரிக்காவில் மீர்காட் (meerkat) என்னும் ஒருவகை கீரிப் பிள்ளை இருக்கிறது. மீர்காட் கீரிப் பிள்ளைகள் பற்றிய கதை இது.

இந்த மாதிரியான மீர்காட் வகை கீரிப் பிள்ளைகள் எல்லாம் சவானா என்ற காட்டுக்குள் வாழ்ந்துவருகின்றன. அந்தக் காட்டுக்குள் இருக்கின்றன பழங்கள் எல்லாம் பறித்துச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருக்கின்றன. அவற்றுக்கு அந்தக் காட்டில் கிடைக்கும் சிவப்பு நிறப் பழம் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், அந்தப் பழம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படி ஒரு பழம் கிடைத்தால் இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழாபோல் கொண்டாடும். ஆனால், அதற்காக மீர்காட் கீரிப் பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். மே மாதம் விடுமுறைக்காக நாம் வருஷம் முழுவதும் காத்திருப்பதுபோல.

அப்படி ஒரு நாள் வந்தது. இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகளின் வளைகளுக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு சிவப்புப் பழம் பழுத்தது. ஒரே ஒரு பழம்தான். கீரிப் பிள்ளைகளுக்கு சந்தோஷம். ஒரே ஓட்டமாக ஓடி மரத்தைச் சுற்றி நின்றுகொண்டன. சில கீரிகள் மரத்தின் மீதேறிப் பழத்தை சந்தோஷமாகத் தடவிக் கொடுத்தன. சில கீரிகள் அந்தப் பழத்தின் வாசனையை நுகர்ந்து பார்த்தன. ஆக, இன்னும் கொஞ்சம் நேரத்தில் பழத்தைச் சாப்பிடப் போறோம் என்ற சந்தோஷம் கீரிகள் கண்களில் தெரிந்தது.

ஆனால், அந்த நேரத்தில் ஒரு சத்தம். கீரிகள் எல்லாம் பயத்துடன் வளைகளுக்குள் பதுங்கின. லேசாகத் தலை தூக்கிப் பார்த்தால், அந்தப் பழத்தை ஒரு பாறு கழுகு (Vulture) நுகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கீரிகளுக்கு ஏமாற்றமும் கோபமும் ஒன்றாக வந்தன. பாறு கழுகு பழத்தைப் பறித்துக்கொண்டு பறந்தது.

ஆனால், விட முடியுமா? கீரிப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றுதிரண்டு பழத்தை மீட்கக் பாறு கழுகைத் துரத்திக்கொண்டு போயின. பாறு கழுகும் விடாமல் பறந்துபோகும். கீரிப் பிள்ளைகள் ஒன்றின் மீது ஒன்று ஏறிப் பாறு கழுகை எட்டிப் பிடித்துவிடும். பழத்தையும் பறித்துவிடும். ஆனால், பழம் கைநழுவிக் கீழே விழப் போகும். இப்போது பழத்தை யார் கேட்ச் (catch) பிடிப்பார்கள், பாறு கழுகா, கீரிப் பிள்ளைகளா, இல்லை கிழே விழுந்து மண்ணுக்காகுமா? முடிவை ‘Catch it’ படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

படம் பார்க்க: >https://www.youtube.com/watch?v=c88QE6yGhfM&t=2s.

இது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

4 mins ago

க்ரைம்

10 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்