அறிஞர்களின் வாழ்வில்… - தலைவர் உருவானார்!

By செய்திப்பிரிவு

6 வயது மார்ட்டின் லூதர் கிங்குக்கு ஓர் அமெரிக்கச் சிறுவன் நண்பனாக இருந்தான். மார்ட்டின் ஆப்பிரிக்க அமெரிக்கர் பள்ளியிலும் நண்பன் அமெரிக்கர் பள்ளியிலும் சேர்ந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நண்பன் விலகினான். காரணம் கேட்டபோது, இனிமேல் உன்னோடு பழகக் கூடாது என்று தன் அப்பா சொன்னதாகச் சொன்னான்.

மார்ட்டின் உடைந்து போனார். பெற்றோரிடம் சொன்னார். அவர்கள் தாங்களும் இதுபோன்று ஏராளமான பாகுபாடுகளைச் சந்தித்திருக்கிறோம் என்றார்கள். ஒருமுறை தன் அப்பாவோடு ஷூ கடைக்குச் சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தார் மார்ட்டின். கடைக்காரர் அது அமெரிக்கர் அமரும் நாற்காலி என்று சொல்லி, அவர்களை வெளியே தள்ளிவிட்டார்.

இன வேறுபாட்டை நன்கு உணர்ந்த மார்ட்டின், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளுக்காகப் போராட முடிவெடுத்தார்.  ஒரு தலைவராக உருவானார். காந்தியக் கொள்கையான அகிம்சை வழியில் தீரத்தோடு போராடினார். 1963-ம் ஆண்டு வாஷிங்டனில் மிகப் பெரிய பேரணி நடந்தது. ‘நான் ஒரு கனவு கண்டேன்’ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை  நிகழ்த்தினார் மார்ட்டின். அதில் இரண்டரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்!

தகவல்: பாலு சத்யா எழுதிய ‘மார்ட்டின் லூதர் கிங்’ என்ற நூல்.
- எஸ். ரிஷி, தாம்பரம்.

இதுபோன்ற மேதைகள், தலைவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை, நூலின் பெயர் குறிப்பிட்டு நீங்களும் எழுதி அனுப்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்