யானை… யானை…

By செய்திப்பிரிவு

# உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளிக் குதிக்க முடியாது.

# தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே தெரிந்துகொள்ளும்.

# யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடைவரை இருக்கும்.

# ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். ஆறாவது தடவை முளைத்த பற்கள் விழுந்து
விட்டால் யானையால் சாப்பிட முடியாது. விரைவில் மரணமடைந்துவிடும்.

# தும்பிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் குடிக்கும் திறனுடையது.

# ஆரோக்கியமான யானை ஒரு நாளைக்கு சுமார் 270 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும்.

# ஆப்பிரிக்க யானைகள் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வதற்கு, சகதியைப் பூசிக்கொள்ளும். இப்படிச் செய்வதன் மூலம் பூச்சிகடியிலிருந்தும் தப்பிவிடும்.

# யானையின் தும்பிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது.

# தும்பிக்கை மூலம் ஒரு நாணயத்தையும் எடுத்துவிடும். ஒரு மரத்தையும் சாய்த்துவிடும்.

# சுமார் எழுபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

# யானைகள் கூட்டமாக வசிக்கக்கூடியவை. கூட்டத்தை வழிநடத்திச் செல்வது வயதான பெண் யானை.

# பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். முதிர்ந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும்.

# தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானை.

- பொ. பாலாஜி கணேஷ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்