காகித மீன் - நீங்களே செய்யலாம்

By செய்திப்பிரிவு

நீரோடைகளில் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதே போன்ற மீன்களை வீட்டில் நீங்களே உருவாக்கலாம். முயற்சி செய்து பார்க்கிறீர்களா?

தேவையான பொருள்கள்:

# பேப்பர் பிளேட் ஒன்று

# அட்டை ஷீட் ஒன்று

# கலர் பென்சில்கள்

# பசை கத்தரிக்கோல்

செய்முறை:

1 பேப்பர் பிளேட்டின் முன்பகுதியில் படத்தில் காட்டியுள்ளபடி அரைவட்டத்தை வரைந்து கொள்ளுங்கள்.

2 இந்த அரைவட்டத்தில் ஒரு முக்கோணத்தை வரைந்துகொண்டு, அதை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதுதான் மீனின் வாய்ப்பகுதியாக அமையும். வெட்டி எடுத்த முக்கோணப் பகுதியை மீனின் வாலாக மறுபக்கம் ஒட்டிக்கொள்ளுங்கள்.

3 மீனின் கண்ணை வரைந்து கொள்ளுங்கள். மீனின் துடுப்பு, நீண்ட முக்கோண வடிவ செதில்கள் ஆகியவற்றை அட்டை ஷீட்டில் இருந்து வெட்டி எடுத்து ஒட்டுங்கள்.

இப்போது அழகிய மீன் உங்கள் கையில் தயாராக இருக்கும்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்