எதிர்கொள்ளலின் படிமங்கள்: சர்வதேச இணைய ஒளிப்படக் காட்சி

By செய்திப்பிரிவு

ஏகலோகம் ஒளிப்பட அறக்கட்டளையின் ‘எதிர்கொள்ளலின் படிமங்கள்’ ( IMAGES OF ENCOUNTER ) என்ற இணையவழி ஒளிப்படக் காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது.

பன்முகத் தளங்களில் படைப்புகளை உருவாக்கும் ஒளிப்படக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் அடித்தளமாக ஏகலோகம் அறக்கட்டளை தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. கரோனா தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலம்-வெளி குறித்த மனிதர்களின் முன்முடிவான கருத்தாக்கங்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. இந்த வேளையில் இணையவழித் தொடர்பு ஒருவரோடு ஒருவர் உறவாடுவதற்கும் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பாக உள்ளது. அதில் ஒளிப்படம் சார்ந்த சொல்லாடல்களையும் முன்னெடுத்துச் செல்ல முடியும். ‘எதிர்கொள்ளலின் படிமங்கள்’ ஒளிப்படக் காட்சி இந்த திசையில் மேற்கொள்ளப்படும் ஒரு முன்முயற்சி.

கலைஞர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை மிகச் சிலரே சந்தர்ப்பவசத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சட்டகங்களுக்குள் பொருந்துகின்றனர். களத்திலிருந்தாலும் சரி, ஒளிப்பட இருட்டறையிலிருந்தாலும் சரி ஓர் ஒளிப்படக்கலைஞர் எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்வதன் காரணமாகவே அவருடைய படைப்பு தீர்மானிக்கப்படுகிறது. சில சம்பவங்கள் உவப்பாக இருக்கலாம் அல்லது விரக்தியைத் தரக்கூடியதாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த எதிர்பாராத சம்பவங்கள் ஓர் ஒளிப்படக்கலைஞரின் வாழ்க்கைப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

“வடிவமைக்கப்பட்ட எதிர்கொள்ளல் அல்லது தற்செயலான சந்திப்பு சார்ந்த கதையாடல்கள் மீது இந்த ஒளிப்படக் காட்சி கவனம் செலுத்துகிறது. இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதும் உள்ள இளம் தலைமுறை ஒளிப்படக் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், இத்துறைக்கு முற்றிலும் புதிதானவர்கள் எனப் பல தரப்பினர் உண்டு.

லினா இசா, நவீன் கவுதம், வினித் குப்தா, அலெக்ஸ் பெர்னாண்டஸ், பார்த்திவ் ஷா, ராபர்ட் நிக்கல்ஸ்பெர்க், மார்ட்டின் பார், யானிக் கார்மியர், ரானியா மாதர், ராமு அரவிந்தன், சியாங்ஜி பெங், ஸ்வரத் கோஷ், தாஹா அஹ்மத், டி. நாராயண், அருண் இன்ஹாம், ரமித் கன், டெப்மல்யா ரே சவுத்ரி, முகுல் ராய், சுனில் குப்தா, நிக் ஓசா, ஆர்.ஆர். சீனிவாசன், புனலூர் ராஜன், அபுல் கலாம் ஆசாத், ஷிபு அரக்கல், ராம் ரஹ்மான், பாபியன் சராவு, டேவிட் பேட், சந்தன் கோம்ஸ் உள்ளிட்டோரின் ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன” என்கிறார் அறக்கட்டளையின் இயக்குநர் அபுல் கலாம் ஆசாத்.

கண்காட்சியைக் காண: www.etpindia.org

ஒளிப்படக் கலைஞர்கள் குறித்து அறிய: www.imagesofencounter.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

13 mins ago

விளையாட்டு

20 mins ago

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

49 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

58 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்