உதாரு விடும் அதாரு

By ஜே.கே

சென்னைன்னா சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மெரினா நேப்பியர் பிரிட்ஜ்ன்னு சினிமா ஓப்பனிங் எல்லாம் ரொம்பப் பழசு. மெட்ராஸ் பாஷைதான் என்னைக்குமே புதுசு. ‘அப்பாடக்கர்’, ‘அதாரு உதாரு’, ‘ப்ரீயா வுடு’ இதெல்லாம் சென்னையையும் தாண்டி எல்லா ஏரியாவுக்குமான ‘யூத் லாங்வேஜ்’ ஆகிடுச்சு.

மெட்ராஸ் பாஷைக்குப் பல சிறப்புகள் இருக்கு. ஒரே வார்த்தைல பெரிய மேட்டரைச் சொல்ல முடியும். எக்ஸாம்பிளா ஒரு மேட்டர். உங்க ப்ரெண்ட்ஸ் யாராச்சும் எக்ஸாம்ல பெயிலாயி, செம மூடவுட்ல இருந்தால், “இதுக்கெல்லாம் மூட் அவுட் ஆகக் கூடாது. இது ஒரு பெரிய மேட்டர் கிடையாது. வாழ்க்கைல இன்னும் நிறைய இருக்கு” அப்படியெல்லாம் லென்த்தா டயலாக் பேச வேண்டியதில்ல. சிம்பிளா, “ப்ரீயா வுடு மாமூ’ன்னா போதும்.

வேண்டாத விஷயம் பேசி, உங்கள கடுப்பேத்துற ப்ரெண்ட்ட பார்த்து, “நீ ஏன் இந்த விஷயத்துல தலையிடுற. ஏம் மேட்டர நான் பாத்துப்பேன். ஓன் வேலைய நீ பாரு” அப்படினு சொல்றதுக்குப் பதிலா, ஷார்ட்டா, “மூடு” அப்டினா போதும். எல்லாம் சொன்ன மாதிரிதான்.

மெட்ராஸ் பாஷைன்னா வார்த்தைல பேசுறது மட்டுமல்ல. கை ஜாடையிலேயே பேசுறதும் உண்டு. அதாவது சைன் லாங்வேஜ் (Sign language). இது மெட்ராஸ் பாஷையோட இன்னொரு ஸ்பெஷல்.

இப்போ நீங்க செமயா திங்க் பண்ணி ஒரு காமெடி சொல்றீங்க, உங்க ப்ரெட்ண்ஸுக்கு அது காமெடியாவே இல்ல. அப்ப அவுங்க எல்லாம் வலது கையைத் தூக்கி உலக உருண்டையத் தூக்கிற மாதிரி காட்டுனாங்க. நீங்க பல்பு வாங்கிட்டீங்கன்னு அர்த்தம். அதாவது மாசக் கணக்குல ஃபாலோ பண்ற பொண்ணு மொத மொத வாய் திறந்து பேசும்போது, ‘அண்ணா’ அப்டின்னா எப்படி இருக்கும், அதான் ‘பல்பு’.

வேண்டாத விஷயங்களப் பேசும்போது சாமி அருள் கொடுக்கிற மாதிரி வலது கையைத் தூக்கிக் குவிச்சு வச்சா, “கொஞ்சம் வாயை மூடு”ன்னு அர்த்தம். எனிமீஸ் வந்து உங்கள மிரட்டும்போது, நான் அவ்வளவு சாதாரண ஆள் இல்ல. டேலண்ட்டுன்னு சொல்ல, வலது கை விரல்கள சூரியன் மாதிரி விரிச்சு, அதுல பெரு விரல், சுண்டு விரல் தவிர எல்லா விரலையும் மடக்கிக் காட்டுனா, “நான் கில்லி”ன்னு அர்த்தம். அதாவது “நான் பெரிய ஆளு”ன்னு அர்த்தம்.

“டாராய்டுவா”, “காண்டாய்ட்டான்” “பேஜாராருக்கு”, “மெர்சலாயிட்டான்” அப்படி இப்படினு மெட்ராஸ் பாஷைக்கு ஒவ்வொரு விதத்திலயும் ஸைன் லாங்க்வேஜ் இருக்கு. “இன்னாபா ஒரே கன்பீசனா இருக்கு” அப்டினீங்கனா, வலது கையை உள்பக்கமா குவிச்சு, படகு துடுப்பு ஆடுற மாதிரி செய்யுங்க, அதுக்கு “ப்ரீயா வுடுங்க”ன்னு அர்த்தம்.

ஓவியம் : முத்து

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்