கோல் போடு இந்தியா!

By ஆர்.கார்த்திகா

ஐ.எஸ்.எல்.- இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப்போட்டிகள் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெற உள்ளன. கொல்கத்தா, சென்னை, டெல்லி, கொச்சி, கோவா, மும்பை, குவாஹாத்தி, பூனே ஆகிய நகரங்களுக்கான எட்டு அணிகள் உள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச வீரர்களின் பங்கேற்பதால் ஐ.எஸ்.எல். ஆட்டங்கள் முதல் ஆண்டிலேயே கால்பந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இப்போது கலக்கிக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.எல் குறித்து இளைஞர்களின் கருத்துகள்.

அனிருத் ரவி, இறுதி ஆண்டு, பி.காம்.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்: ஐ.எஸ்.எல்-இல் இந்திய வீரர்கள் சர்வதேச வீரர்களுடன் விளையாடுவதால் அவர்களுக்கு நல்ல எக்ஸ்போசர் கிடைக்கும். ஐ.எஸ்.எல் இந்தியாவில் ஆரம்பித்திருப்பதால் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு இது ஒரு தளமாக இருக்கும்.

பிடித்த அணி: சென்னையின் எப்சி

ஐ.எஸ்.எல் vs ஐ.பி.எல் : கண்டிப்பாக இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஐ.எஸ்.எல், ஐ.பி.எல்-லை டாமினேட் செய்துவிடும். முதல் ஆண்டிலேயே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ஐ.எஸ்.எல்.

இந்தியாவில் கால்பந்து:

தேசிய, இந்திய கால்பந்து அணியைப் பொறுத்தவரை இது ஒரு தொடக்கமே. ஐ.எஸ்.எல். ஒரு நல்ல பயிற்சித் தொடராக அமையும். சர்வதேச அளவிலான வெற்றிகள் பெற இன்னும் சில வருடங்கள் ஆகும்.

ஜெயஸ்ரீ, இரண்டாம் ஆண்டு, பி.இ.

இந்தியாவில் ஐ.எஸ்.எல் : நான் தீவிர கிரிக்கெட் ரசிகை. தோனி,கோஹ்லி என அனைவரும் ஐ.எஸ்.எல் ப்ரொமோஷன் செய்ததால், நானும் ஐ.எஸ்.எல். பார்க்கத் தொடங்கினேன். இதுவரை கால்பந்து விளையாட்டைப் பார்க்காதவர்களையும் ஈர்த்துள்ளது இந்தத் தொடர்.

பிடித்த அணி: சென்னையின் எப்சி, அட்லெட்டிகோ டி கொல்கத்தா

ஐ.எஸ்.எல் vs ஐ.பி.எல் : ஐ.பி.எல். அளவு ஐ.எஸ்.எல். பிரபலமடைய சில வருடங்கள் ஆகும். ஆனால், ஐ.எஸ்.எல். தொடர் இந்தியாவில் கால்பந்து ஆட்டங்களுக்கு ஒரு தொடக்கமாக அமையும். இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.

இந்தியாவில் கால்பந்து : நம் நாட்டில் கால்பந்து ஆட்டத்திற்கான ரசிகர்கள் பெருயுள்ளனர். தேசிய கால்பந்து அணியில் திறமையான வீரர்கள் இடம்பெற ஐ.எஸ்.எல் தொடர் போட்டிகள் உதவும்.

அர்ஜுன், இரண்டாம் ஆண்டு, பி.காம்.

இந்தியாவில் ஐ.எஸ்.எல்: நீண்ட நாளாக காத்திருந்த இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஐ.எஸ்.எல் ஒரு சரியான தொடக்கம். சர்வதேச லீக் போட்டிகளையும், சர்வதேச அணிகளுக்கும் சப்போர்ட் பண்ணிட்டு இப்போது நம்ம ஊருக்காக சப்போர்ட் பண்ணுவதும், போட்டிகளைப் பார்ப்பதும் கால்பந்து விளையாட்டு நம் நாட்டில் வளருவதற்கான சரியான நேரம் எனத் தெரிகிறது.

பிடித்த அணி: சென்னையின் எப்சி

ஐ.எஸ்.எல் vs ஐ.பி.எல் : ஐ.பி.எல். அளவு ஐ.எஸ்.எல். ஹிட் ஆவதற்குப் பல வருடங்கள் ஆகும். கிரிக்கெட்டை ஃபாலோ செய்வது ஈஸி. கால்பந்து விளையாட்டை எல்லோராலும் ஃபாலோ செய்ய முடியாது. ஆனால் பார்க்கத் தொடங்கிவிட்டால், ‘பெஸ்ட் கேம் ‘ஃபார்எவர்’ என்று சொல்லாம்.

இந்தியாவில் கால்பந்து : தேசிய அளவில் மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள பல்வேறு கால்பந்து கிளப்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கை இப்போது உருவாகி இருக்கிறது. ஐ.எஸ்.எல் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜேகப் லியோ, இரண்டாம் ஆண்டு, விஸ்காம்

இந்தியாவில் ஐ.எஸ்.எல் : 90 நிமிட விறுவிறு விளையாட்டு. நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் கால்பந்து மீதான ஆர்வம் கூடியுள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்திற்கு இவ்வளவு ரசிகர்கள் நம் நாட்டில் உள்ளனர் என்பது ஐ.எஸ்.எல். மூலம் தெரியவந்திருக்கிறது.

பிடித்த அணி: சென்னையின் எப்சி

ஐ.எஸ்.எல் vs ஐ.பி.எல் : கிரிக்கெட் வேறு, கால்பந்து வேறு. அந்தந்த விளையாட்டிற்குத் தனித்தனியாக ரசிகர்கள் உள்ளனர். அணியாக விளையாடக்கூடிய போட்டிகளைத் தவிர தனி மனிதர் விளையாட்டுகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். ஐ.எஸ்.எல். ஐ.பி.எல். என இரண்டிற்கும் ப்ரமோஷன் தேவையான அளவு இருக்கிறது. மற்ற விளையாட்டுக் களைத்தான் இப்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கால்பந்து: பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கால்பந்து போட்டிகளை நடத்தி ஊக்குவிக்க வேண்டும். தேசிய கால்பந்து அணி இன்னும் சில வருடங்களில் ஃபிஃபாவில் விளையாடத் தகுதி பெறுவதற்கு ஐ.எஸ்.எல். உதவும். இந்தியாவில் கால்பந்து ரசிகர்கள் ஐ,எஸ்.எல்-ஐக் கொண்டாடுவதாக இருந்தாலும், இந்தத் தொடர் நம் நாட்டின் கால்பந்து எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைய வேண்டும். சர்வதேச அளவில் இந்தியக் கால்பந்து அணி இன்னும் கோல் போடவில்லை என்பதுதான் உண்மை. கோல்போடு இந்தியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

56 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்