காமிக்ஸ் தில்லுமுல்லுகள் 01 - பேட்மேன் போய் ஸ்பைடர் வந்தார் டும் டும் டும்

By கிங் விஸ்வா

கவுண்டமணியார்: ஏம்ப்பா, நம்ம டீவி சீரியல்ல, ஒரு ஆக்டர் வரலைன்னா, ‘இனி இவருக்குப் பதிலாக, இவர்’ன்னு டைட்டில் கார்டு போடுவாங்களே, நீ பாத்திருக்கியா?

செந்திலார்: ஆமாம், பாத்திருக்கேன். அதுக்கு என்னண்ணே இப்போ?

கவுண்டமணியார்: அதே மாதிரி, தமிழ் காமிக்ஸ்லயும் ‘இவருக்குப் பதிலாக, இவர்’னு ஒரு டுபாக்கூர் கார்டு போட்டிருக்காங்க, உனக்குத் தெரியுமா?

செந்திலார்: டுபாக்கூர் கார்டா? என்னண்ணே சொல்றீங்க? அது எப்டி முடியும்?

கவுண்டமணியார்: சொல்றேன் கேளு. உனக்கு பேட்மேன் யார்னு தெரியுமில்லியா?

செந்திலார்: ஆமாம். நம்ம நோலன், மிஷ்கின்லாம் வச்சு படம் எடுத்தாங்களே, அந்த காமிக்ஸ் கீரோதான?

கவுண்டமணியார்: அட, மிஷ்கினை உடுப்பா. நோலன் எடுத்தாருல்ல, அந்த ஹீரோதான். அவரு மொதல்ல காமிக்ஸ் கதைல வந்ததுக்கு அப்புறமாதான் சினிமா ஹீரோவா வந்தாரு.

செந்திலார்: சரி, அவருக்கு என்னண்ணே, இப்போ?

கவுண்டமணியார்: இல்லபா, தமிழ்ல காபிரைட் உரிமை எல்லாம் வாங்காம, பேட்மேனோட ஒரு காமிக்ஸ் கதைய எடுத்து, அதுல பேட்மேன் வர்ற எடத்துல எல்லாம் ‘விபூதி அடிச்சிட்டு’, அதுக்குப் பதிலா வேற ஒரு பாப்புலர் ஹீரோவ மொக்கையா வரைஞ்சு, ஒரு புது சாதனையை செஞ்சிருக்காங்க தெரியுமா?

செந்திலார்: அண்ணே, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்கண்ணே?

கவுண்டமணியார்: சொல்றன். அர்னால்ட் நடிச்சி ‘Batman & Ronin’ன்னு ஒரு படம் வந்துச்சு, இல்ல? அதுல அர்னால்டுகூட கைல ஒரு ஐஸ் துப்பாக்கி வச்சி சுட்டு, எல்லாரையும் ஐஸ்கட்டி ஆக்குவாறே?

செந்திலார்: ஆமாண்ணே, நம்ம ‘கே டீவி’லகூட டப்பிங் பண்ணி போடுவாங்களே, அந்தப் படம்தானே? பாத்துருக்கேன்.

கவுண்டமணியார்: அந்த கேரக்டர் பேரு, மிஸ்டர் பிரீஸ். அவர வச்சி 1979-ல ஒரு பேட்மேன் காமிக்ஸ் கத வந்துச்சி. காப்பிரைட் விஷயத்தில் உலக சாதனை படைத்த நம்ம ‘சிவகாசி சிங்கமுத்து’, அந்தக் கதய எடுத்து விபூதி அடிச்சி வெளாண்டுட்டார். கதைல பேட்மேனோட ஓவியத்த தூக்கிட்டு, அவருக்குப் பதிலா, அப்போ தமிழ்ல பிரபலமா இருந்த இன்னொரு காமிக்ஸ் கீரோவான ஸ்பைடரை அந்த எடத்துல ஒட்டி ‘புது காமிக்ஸ’ தயார் பண்ணிட்டார், நம்ம ‘காப்பிரைட் சித்தர்’ சிவகாசி சிங்கமுத்து.

செந்திலார்: எதுக்குண்ணே அப்டி செஞ்சாரு?

கவுண்டமணியார்: ஏன்னா, அப்போல்லாம் ஸ்பைடரை அட்டையில போட்டாலே, புக்கு வித்துத் தீர்ந்துரும். ஆனா, இவர்ட்ட ஸ்பைடரோட புது கத எதுவும் ஸ்டாக் இல்ல. அதனால, இவரே ‘புதுசா ஸ்பைடர்’ கதய ரெடி பண்ண நெனைச்சாரு.

செந்திலார்: அதனால?

கவுண்டமணியார்: அதனால, ஒரு பழைய பேட்மேன் காமிக்ஸ எடுத்தாரு. அதுல பேட்மேன் வர எடத்துல எல்லாம் அவர வெட்டிட்டு, அங்க ஸ்பைடர்னு வேற ஒரு காமிக்ஸ் கீரோ படத்த ஒட்டிட்டாரு நம்ம காப்பிரைட் சித்தர். ஒலகம் முழுக்க புதுசா காமிக்ஸ் கதைகள ரெடி பண்ண, லட்சக்கணக்குல செலவு பண்றாங்க. நம்ம சிவகாசி சிங்கமுத்து, சும்மா வெட்டி ஒட்டியே ‘புது கதைய’ ரெடி பண்ணிட்டாரு. இதுல காமெடி என்ன தெரியுமா?

செந்திலார்: அப்போ இதுவரைக்கும் சொன்னது காமெடி இல்லையாண்ணே?

கவுண்டமணியார்: டேய் மண்டையா. ஸ்பைடர் & பேட்மேன் ரெண்டுமே டிசி காமிக்ஸ் நிறுவனத்தோட காபிரைட் உரிமம் பெற்ற கதாபாத்திரங்கள்.

செந்திலார்: ஏண்ணே, ஒரே கம்பெனியோட ரெண்டு கீரோங்கள வச்சி, நம்ம சிவகாசி சிங்கமுத்து விளையாடிருக்காரே, இது தப்புதானே?

கவுண்டமணியார்: நாலு பேருக்கு படிக்க ‘புதுசா காமிக்ஸ்’ உருவாக்குனா, எதுவுமே தப்பு இல்ல நைனா. புரிஞ்சுக்கோ. தெரிஞ்சுக்கோ.

- கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்