புத்துணர்ச்சி தரும் லாப்டாப் ஸ்கின்கள்

By ரஞ்சனி ராமநாதன்

உடைகளிலும், சிகை அலங்காரங்களிலும் மட்டுமே டிரெண்ட் மாறிக்கொண்டே இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், இந்தக் காலத்து இளைஞர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அவர்களைப் பற்றி ஒரு கதையை சொல்கிறது.

வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட மடிக் கணினிகளையும் அலங்கரிக்க வந்துவிட்டது பல டிசைன்களில் லாப்டாப் ஸ்கின்கள்.

கல்லூரி மாணவ, மாணவியரிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த லாப்டாப் ஸ்கின்கள் பெரும்பாலாக ஆன்லைனில் போஸ்டர் கலி, ஃபிளிப்கார்ட், ஈபே போன்ற தளங்களில் 400 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. “எனக்கு அப்ஸ்டிராக்ட் டிசைன்களின் மேல் பெரிய ஈர்ப்பு உள்ளது.

ஆன்லைனில் பல டிசைன்கள் இருப்பதால் எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழம்பிய நேரமே அதிகம். நாம் விருப்பப்பட்டு அணியும் ஆடைகளைப் போல, லாப்டாப் ஸ்கின்களையும் என் ஸ்டைலைக் குறிக்கும் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன்” என்கிறார் கல்லூரி மாணவி உமா மகேஸ்வரி.

போஸ்டர் கலி (Postergully)

இந்தியாவின் முதல் ஃபேன் ஸ்டோர் ‘போஸ்டர் கலி’. பல கலைஞர்கள் தங்கள் கலைப் பொருள் டிசைன்களை ‘போஸ்டர் கலி’ யின் மூலம் விற்பனை செய்யலாம். சுவரில் ஒட்டும் போஸ்டர்களிலிருந்து, புது வடிவங்களில் காபி மக்குகள், லாப்டாப் ஸ்கின்கள், மொபைல் போன் உறைகள் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர்.

இதுமட்டுமின்றி அவரவர்களுக்குப் பிடித்த பர்த்டே பார்ட்டி, திருமண நிகழ்ச்சி போன்ற மறக்க முடியாத தருணங்களின் புகைப்படத் தொகுப்பையும் லாப்டாப் ஸ்கின்களாக அச்சிட்டுத் தருகின்றன ‘பிரிண்ட் அவென்யூ’ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்.

லாப்டாப் ஸ்கின் இன்ஸ்பிரேஷன்

அழகான டிசைன்களைக் காட்டிலும் ஆழ்ந்த கருத்துகளை ரசிப்பவர்களுக்காக, உத்வேகத்தைத் தூண்டும் வகையில், இன்ஸ்பிரேஷன் கோட்ஸுடன் கூடிய உறைகள் பலவும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைகளைப் பார்க்கிறார் அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணிபுரியும் திவ்யா.

“வண்ணமயமான ‘இன்ஸ்பையரிங் கோட்ஸ்’ கொண்ட லாப்டாப் ஸ்கின் எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமின்றி பெயிண்டிங் என்னுடைய பொழுதுபோக்குகளில் ஒன்று. எனக்குப் பிடித்தவாறு என்னுடைய லாப்டாப் ஸ்கின்னை நானே டிசைன் செய்து, பின்பு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கினேன். இது என்னை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டும் ஒரு பொருளாக நினைக்கிறேன்.

என் ஃப்ரெண்டுஸ் பலருக்கு, அவர்கள் என்னுடன் இருக்கும் புகைப்படங்களை லாப்டாப் ஸ்கின்னில் அச்சடித்து கிப்ட் செய்துள்ளேன்” என்கிறார் அவர்.

தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும் வண்ண வண்ண டிசைன்களைக் கொண்டுள்ளதைத் தாண்டி, இது போன்ற சிறிய பொருட்கள் சந்தோஷத்தைப் பகிர்வதற்கும் உதவுகின்றன. “அடிக்கடி உபயோகிக்கும் லாப்டாப் போன்ற ஒரு பொருளில் ஒட்டப்படுவதால்தான், இதை வாங்குவதில் நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

என்னுடைய லாப்டாப் ஸ்கின்னில் ‘ஹாப்பினஸ் இஸ் எ சாய்ஸ்’ என்று எழுதி இருக்கும். ஒவ்வொரு முறை அதை பார்க்கும் போதும் எனக்குள் பூரிப்பு ஏற்படுகிறது” என்கிறார் கல்லூரி மாணவி அனுபமா.

காலத்திற்கு ஏற்றார் போல் தங்களுக்கான அடையாளங்களை அதிகக் கலையுணர்வுடனும், ரசனையுடனும் தேர்ந்தெடுக்கிறார்கள் இக்காலத்து இளைஞர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தொழில்நுட்பம்

8 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

46 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்