அவர்ட்ட மைக்க கொடுங்க

By ராகு

நமக்கு அதிகமாக ஹெல்ப் பண்ணும் ஃப்ரண்ட்ஸ்தான் நம்மை அதிகமாகக் கலாய்க்கவும் செய்வார்கள். எது சொன்னாலும் எதாவது கவுன்ட்டர் கொடுத்து நம்மைக் காலி பண்ணிருவாங்க. ஃபேஸ்புக்க மட்டும் விட்டு வைப்பாங்களா என்ன? சும்மா புகுந்து விளையாடுவாங்க.

ஆசைஆசையாக ஒரு போட்டோவையோ, ஸ்டேட்டஸையோ ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணிய மறு விநாடியே ஒரு கமெண்ட் வந்துவிழும். நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க அப்படி ஒரு அட்டாக்க. அதுவும் நம்ம போஸ்ட்டுக்கு ஏத்த மாதிரியான படத்தோட அது இருக்கும். பாவிப் பயலுககிட்ட எப்படித்தான் அவ்வளவு சுறுசுறுப்பு இருக்குதோன்னு தோணும். ராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட டக்குன்னு பதில் சொல்லி நம்மை வாயடைக்க வச்சிருவாங்க.

அதுவும் சமீப காலமா இதில் நம்மாளுங்க பின்னி பெடல் எடுக்குறாங்க. ஃபேஸ்புக்க ஒரு உருட்டு உருட்டுனீங்கன்னா எங்காயாவது ஒரு கமெண்டுலயாவது தன்னை மறந்து சிரிச்சிருவீங்க. அந்த அளவுக்கு லந்து கொடுக்குறாங்க.

சீரியஸா எதாவது ஸ்டேட்டஸ் போஸ்ட் பண்ணினால் போதும், பசங்க பொங்கி புல்லரிச்சிருவாய்ங்க. ஊரெல்லாம் சிரிப்பா சிரிக்கிற அளவுக்கு ஒரு போட்டோ கமென்ட் போட்டாதான் அன்னக்கி ராத்திரி அவங்களால நிம்மதியா உறங்க முடியும். பச்சுன்னு மனசுல ஒட்டுற மாதிரியான பசுமையான இடத்தைப் பார்த்து நச்சுன்னு ஒரு போஸ் குடுத்து ஃபேஸ்புக்ல போட்டா மைக்ரோ செகண்ட் கேப்ல நம்மாளுங்க “தம்பி நீங்க பளபளன்னு எம்.ஜி.ஆர். மாதிரி மின்னுறீங்க”ன்னு ஒரு போட்டோ கமெண்ட்ட போடுவாங்க பாருங்க. சான்ஸே இல்ல.

இதுல அவங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது. இதையெல்லாம் மீறி நீங்க துணிஞ்சு வேறு முயற்சி பண்ணினா அவ்வளவு தான் துண்டக் காணோம் துணியைக் காணோம்னு உங்களை ஓட விடுற அளவு போட்டோ கமெண்ட்கள் குவியும். நாம மட்டும் சளைச்சவங்களா என்ன, “நீ என்னதான் கிண்டல் பண்ணினானும் நான் கருத்து சொல்லிகிட்டே தான் இருப்பேன்னு” தொடர்ந்து போஸ்ட் பண்ணிட்டேதான இருக்கிறோம்.

கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், கஞ்சா கருப்பு என்று ஒரு காமெடி நடிகர் விடாமல் அவர்களது படத்தில் ஒலித்த காமெடி பஞ்ச்களைப் போட்டு பிச்சு ஒதர்றாங்க. போதாக்குறைக்கு நீயா நானா கோபி போன்ற பிரபலங்களையும் இவங்க விடுறது இல்ல. இதுக்காகவே ரெடிமேடா பல டயலாக்குகளைப் போட்டு படங்களை வச்சிருக்காங்க சிலர். அதுல இருந்து எடுத்து கமெண்ட் போடுறங்களும் இருக்காங்க.

அதெல்லாம் பிடிக்காத கிரியேட்டிவ் கிங்குகள் என்ன பண்றாங்கன்னா, பொருத்தமா ஒரு படத்தை எடுத்து அதுல தேவைப்படுற டெக்ஸ்ட நிரப்பி போடுறாங்க. ஒருத்தனைக் கிண்டல் பண்றபோது கிடைக்கிற சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாதுன்னு சொல்றாங்க. இதெல்லாம் சீரியஸா எடுத்துக்கவே கூடாதுங்க. எல்லாமே ஜாலிதாங்க இவங்களுக்கு. அதனால ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்