இந்திய சினிமா: காலத்தின் நடனம்!

By செய்திப்பிரிவு

ஆணாதிக்கவாதிகளோடு போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணத்தோடு தொடங்குகிறது, குஜராத்திய மொழித் திரைப்படமான ‘ஹெல்லாரோ' (Hellaro).குஜராத் மாநிலம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கும் தார் பாலைவனத்து சிறு கிராமத்தில் 1975-ம் ஆண்டில் நடைபெறும் கதைதான் திரைப்படத்தின் களம். இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில் அன்றைய காலகட்டங்களில் பெண்களின் சமூக நிலைமையை படத்தின் வழியாக யூகிக்க முடிகிறது.பெண்களுக்கான சுதந்திரம் அருகிப் போன கிராமம். நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பாலை நிலம். ஊர்த்தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மூன்றாவது ஆண்டாக மழையை வேண்டி திருவிழாவுக்கு தயாராகிறது கிராமம். திருவிழாவுக்கு முன் இரவுகளில் ஆண்கள் கார்பா நடனமாடுகின்றனர். பெண்கள் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. வழிபடுவது மட்டும் துடியான பெண் தெய்வம்!

நிலத்துக்கு உரியவளாகப் பெண் தெய்வத்தை மையப்படுத்திய கொண்டாட்டம், சடங்குகள், நம்பிக்கைகளோடு பெண்கள் சிக்குண்டு இருக்கின்றனர். வீட்டில் முடங்கி ஏங்கி கிடக்கின்றனர். ஒரு கேள்வி எழுப்பக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட அடிமை வாழ்வு. கிராமத்தில் பெண்கள் தங்களுக்குள் மனம் திறந்து பகிர்ந்துகொள்ளும் நேரமாக தினந்தோறும் காலையில் தண்ணீர் எடுக்கச் செல்லும் சில நிமிடங்கள் பயணமே வாய்க்கிறது. ஹெல்லாரோ என்றால் எதிர்பாராமல் வெடித்துக் கிளம்பும் எழுச்சி என்று பொருள். பாலைநிலத்தின் பெண்களின் வாழ்வும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, வறட்சியான வாழ்வாகவே இருக்கிறது. வெடித்துக் கிளம்பும் மழையைப் போல எல்லாமே உருமாறும் ரசவாதம்தான் திரைக்களம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்