சினிமா எடுத்துப் பார் 71: தயாரிப்பாளர் கதாநாயகன் உறவு!

By எஸ்.பி.முத்துராமன்

பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு குடும்பமும், சினிமா துறையைச் சார்ந்தவர்களும், மக்களும், பத் திரிகைகளும், ஊடகங்களும் சிறந்த மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத் தின. அதையெல்லாம் மனதில் ஒருபுறம் வைத்துக்கொண்டு அடுத்த அத்தி யாயத்தை தொடங்குவோம்.

‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் கார்த்திக்கும், துளசியும் ரஜினிகாந்த் தங்களுக்கு துரோகம் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவரிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். ரஜினி காந்த் எல்லா சொத்துகளையும் அவர் களுக்கு கொடுத்துவிடுவார். கார்த்திக், ‘‘எல்லாத்தையும் எங்களுக்கு கொடுத் துட்டீங்களே! உங்களுக்கு வேண்டி யதை எடுத்துக்கோங்க?’’ என்பார். ரஜினி அப்போது, ‘‘தன் மனைவி ராதிகா வின் புகைப்படத்தை மட்டும் எனக்கு கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொள் வார்.

தன் மனைவி ராதிகாவின் படத்தோடு வீட்டை விட்டு வெளியே செல் வார். கார்த்திக்கும், துளசியும் வருத்தத்தோடு அதைப் பார்ப் பார்கள். அத்துடன் படத்தை முடித்திருந்தேன். படத்தை எல்லோரும் போட்டுப் பார்த்தோம். கதையும், கமர்ஷியலும் கலந்து மிகச் சிறந்த படமாக வந்திருந்தது. எல்லோரும் பாராட்டினார்கள்.

மறுநாள் காலையில் சரவணன் சாரை போய் பார்த்தேன். சரவணன் சார், ‘‘ரொம்ப திருப்தியா வந்திருக்கு முத்து ராமன். படத்தின் முடிவை ரொம்ப எதார்த் தமா முடிச்சிருக்கீங்க. இது ஒரு விருது வாங்கப்போற படத்துக்கான முடிவா இருக்கு. நம்ம படம் கமர்ஷியல் படம். ரஜினியுடைய ரசிகர்கள் படத்தின் முடிவில் ஒரு சண்டைக் காட்சியை வைத்து வில்லன்களை அடித்து தோல்வி யடைய செய்து ரஜினி வெற்றி பெற்றால் தான் முழுமையாக ரசிப்பார்கள். ஆகவே, முடிவை மாற்றி எடுத்துவிடுங்கள். ரஜினியிடம் பேசுங்கள்’’ என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ரஜினியிடம் போய் சொன்னேன். ‘‘நாம் படத்தில் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவுதான். ஆனால், சரவணன் சார் சொல்கிற கமர்ஷியல் முடிவு ரசிகர்களுக்கு திருப்தி தருகிற முடிவாக இருக்கும். மாற்றி எடுத்துவிடுவோம்’’ என்றார். அதன் பிறகு, கார்த்திக்கை வில்லன்கள் கடத்திச் சென்று ஒரு மரம் அறுக்கும் தொழிற்சாலையில் அடைத்து வைப்பதுபோன்ற காட்சியை வைத்தோம். ரஜினி அங்கே சென்று பழைய தாதாவாக மாறி அந்த வில்லன்களோடு போராடி வெற்றி பெறுவதுடன், கார்த்திக்கை காப்பாற்றி கொண்டு வருவார். எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த இடத்தில் வணக்கம் போட்டு முடிவாக்கினோம். சரவணன் சார் சொல்லியதை போலவே மக்களிடம் படம் பெரிய வரவேற்பை பெற்றது. ‘நல்லவனுக்கு நல்லவன்’ பெரிய அளவில் வெற்றிப் படமானது!

சில மாதங்களுக்கு முன்னால், நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரஜினிகாந்த் அவர்கள் சரவணன் சாருக்கு போன் போட்டிருக்கிறார். சரவணன் சார் போனை எடுத்து, ‘ரஜினி பேசுறேன்’ என்பதை கேட்டதும் பதற்றமாகி, ‘‘என்ன ரஜினி, இந்த நேரத்துல என்னை கூப்பிட்டிருக்கீங்க?’’ என்றார்.

அதற்கு ரஜினி, ‘‘ஒண்ணும் பதற்றப் படாதீங்க சார். இப்போ நம்ம ‘நல்லவ னுக்கு நல்லவன்’ படத்தை பார்த்தேன். அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக் கணும்னு முத்துராமன் சாருக்கு போன் போட்டேன். அவர் கிடைக்கலை. உங்க கூட பேசலாம்னு தோணுச்சு. அதான் கூப் பிட்டேன். என்ன மாதிரி படம் எடுத்துக் கோம் சார். ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்துல எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி எல்லா காட்சிகளும் அமைஞ்சிருக்கு சார். கதை, வசனம், இசை, பாட்டு, நடனம், சண்டை காட்சிகள் இப்படி அமையுறது ரொம்ப கஷ்டம் சார். அதுல சிறந்த நடிப்பை வெளிப்படுத்துற வாய்ப்பு எனக் கும், ராதிகாவுக்கும் கிடைச்சிருக்கு. இது எல்லா படத்துலயும் அமையாது. இதை பார்த்ததும், இந்த சந்தோஷத்தை தயா ரிப்பாளர்கிட்ட பகிர்ந்துக்கத்தான் உங் களைக் கூப்பிட்டேன் சார்’’ என்றார்.

சரவணன் சார், “ எனக்கும், எஸ்பி.எம் குழுவுக்கும் கிடைச்ச பாராட்டு சார் இது. உங்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவிச்சிருக்கிறோம்!’’ என்றார். ரஜினி மகிழ்ந்தார். தயாரிப்பாளர், கதாநாயகன் உறவு எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி!

எங்களோட அடுத்த படமும் ஏவி.எம். நிறுவனத்துக்குத்தான். என்னோட ‘ஒரு கண்’ணைப் பத்தி சொல்லிவிட்டேன். ‘அடுத்த கண்’ணைப் பத்தி சொல்ல வேண் டாமா? அது கமல் நடித்து நான் இயக்கிய ‘உயர்ந்த உள்ளம்’. இந்தப் படம் இரண்டு நண்பர்களை பற்றிய படம். அந்த நண்பர் களாக கமலும், ராதாரவியும் நடித்தார்கள்.

இளையராஜா இசையில், ‘வந்தாள் மகாலக்ஷ்மியே’ என்ற பாட்டுக்கு கமல் ஆடிய நடனம், நடனக் கலைஞர்களையே பிரமிக்க வைத்தது. இதன் நடன அமைப்பு புலியூர் சரோஜா. ‘எங்கே என் ஜீவனே’ என்ற அம்பிகா, கமலுடைய பாடல் தந் திரக் காட்சிகள் மூலம் சிறப்பாக எடுக்கப் பட்டது. ‘காலைத் தென்றல்’ என்ற பாட்டை அதிகாலையில் எடுப்பது என்று முடிவு செய்தோம். கமலுடைய பங்களாவில் ஒரு அவுட் ஹவுஸ். அதில் அம்பிகா தங்கி யிருப்பார். அதிகாலையில் அம்பிகா அந்த அவுட் ஹவுஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதை சூரிய உதயத்தின் போது இயற்கையாக புகைகளை உருவாக்கி மேக மூட்டம் போல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். அந்த சூழ்நிலையில்தான் கமல், அம்பிகாவை பார்ப்பார். சூரிய உதயம்போல் அவர் கள் காதலும் உதயமாகும்.

அதேபோல், சண்டைக் காட்சிகளில் ஜூடோ ரத்னம் வித்தியாசமான முறையில் ஒரு பெஞ்ச் ஃபைட்டை உருவாக்கியிருந் தார். டீக்கடையில் கிடக்கும் ஒரு பெஞ்ச்சை எடுத்துக்கொண்டு கமல் சண்டையில் சாகசங்கள் செய்தது அவரது திறமையை வெளிப்படுத்தியது. படத்தின் கிளைமாக்ஸில் வில்லன்கள் துரத்த, கமல் ஒரு ஆட்டோவில் ஏறி புறப்படுவார். வில்லன்கள் துரத்துவார் கள். அந்த இடம் எது தெரியுமா? இன் றைக்கு சென்னையில் ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ என்ற பெயரில் ஒரு வியாபார மால் இருக்கிறதே அந்த இடத்தில் பாழ டைந்த பழைய கட்டிடங்கள் இருந்தன. அதுதான் எங்களுக்கு வில்லன்களின் கூடாரம். அந்த கூடாரத்தில் இருந்துதான் வில்லன்கள் புறப்படுவதாக காட்சிகள் எடுத்தோம்.

அந்த சேஸுக்கும், கிளைமாக்ஸ் சண்டைக்கும் பப்பு வர்மாவை மாஸ்ட ராக ஒப்பந்தம் செய்திருந்தோம். அந்த சேஸில் ஆட்டோ ஓட்டுகிற கமல் உயர மான இடத்தில் ஜம்ப் செய்து தப்பிப்ப தாக காட்சி. பப்பு வர்மாவிடம், ‘‘ஆட்டோ ஜம்ப் எடுக்க எனக்கு பயமாக இருக்கு. அடிபட்டா என்னாகும்?’’ என்று பயந் தேன். ‘‘உங்களுக்கு பயமா இருந்தா டாக்டர், ஆம்புலன்ஸ் எல்லாத்தையும் வர வைங்க’’ என்றார். அடுத்து அந்த ஆட்டோ ஜம்ப் என்ன ஆயிற்று?

- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்