கலக்கல் ஹாலிவுட்: தந்தையைத் தேடி பூமிக்குப் பயணம்

இழந்த உறவைத் தேடிக் கண்டுபிடிக்கும் உணர்ச்சி கரமான திரைப்படங்கள் உலகின் எல்லா மொழிகளிலும் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் ரசிகர்களை புதிய விண்வெளி அனுபவத்துக்கு உள்ளாக்க வருகிறது ‘தி ஸ்பேஸ் பிட்வீன் அஸ்’ (The space between us) என்ற ஹாலிவுட் படம். இந்தப் படத்தில் கதாநாயகன் தன் தந்தையைத் தேடி செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வருகிறான். ஆமாம்! இந்தப் படத்தின் கதாநாயகன் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன். அது எப்படி என்கிறீர்களா? மனித இனம் வசிக்க ஏதுவான கிரகங்களை நோக்கி ஆய்வு செய்ய பல குழுக்கள் பூமியிலிருந்து பயணிக்கின்றன. அதில் ஒரு குழு செவ்வாய் கிரகத்துக்குச் செல்கிறது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருபெண் கருவுற்றிருப்பது பயணத்தின் நடுவில்தான் தெரியவருகிறது.

மார்ஸின் மனிதக் குழந்தை

இருப்பினும் தொடங்கிய பயணத்தை நிறுத்த முடியாமல் அக்குழு செவ்வாய் கிரகத்தைச் சென்றடைகிறது. அங்கு குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார் அந்த இளம் தாய். அந்தக் குழந்தைதான் நாயகன். ‘மார்ஸ்’ கிரகத்தில் பிறந்த மனிதக்குழந்தையாக வளரும் அவனுக்கு தன் தாயின் பூர்வீகம் பூமி என்பது தெரியவர தனது தந்தையின் முகத்தைக் காண ஏங்குகிறான். ஆனால் அதைச் சொல்லாமல் மரணித்துவிட்டாளே அவனது தாய்! செவ்வாயிலிருந்தபடியே இணைய நட்பு வழியாகப் பூமியில் தனக்கான காதலைக் கண்டுபிடிக்கிறான் பதின்பருவம் தாண்டாத அந்தச் சாகஸக்காரன்.

தன் காதலியைத் தேடி பூமிக்குப் புறப்படும் அவன் அவளைச் சந்தித்தானா? அதைவிட தன் வாழ்நாளின் மிக முக்கிய லட்சியமாக வைத்திருக்கும் தனது அப்பா யார் என்ற முடிச்சை அவனால் அவிழ்க்க முடிந்ததா? பூமி, செவ்வாய் ஆகிய இரண்டு மாறுப்பட்ட உலகங்களுக்கு இடையில் அவனை இணைப்பது எது? பூமியில் அவனது அனுபவங்கள் எப்படி அமைந்தன, இத்தனை சுவாரஸ்யமான கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் அடுத்தமாதம் வரை காத்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே அமெரிக்காவில் வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம் கிராஃபிக்ஸ் காட்சிகள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பிப்ரவரி 3-ம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ஃபன்னி போன்ஸ் (Funny bones), ‘ஹியர் மை சாங் (Hear my song), போன்ற மாறுபட்ட படங்களைக் கொடுத்த பீட்டர் செல்சம் (Peter chelsom) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கேரி ஓல்டுமேன், அசா பட்டர்ஃபீல்டு, கார்லா ககினோ, பிரிட் ராபர்ட்சன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 121 நிமிடப் படத்தில் விண்வெளிக் காட்சிகள் வியப்பூட்டும் விதத்தில் இருந்தாலும் காதல் காட்சிகளை புதிய கோணத்தில் சித்தரித்திருக்கிறாராம் இயக்குநர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தொழில்நுட்பம்

5 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

43 mins ago

தமிழகம்

58 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்