திரை விமர்சனம்: ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்

By இந்து டாக்கீஸ் குழு

ஆந்திராவின் எமசிங்கபுரத் தில் தன் கூட்டத்தினருடன் வசிப்பவர் எமன் (விஜய் சேதுபதி). கொலை செய்யக்கூடாது; அடிதடியில் ஈடுபடக் கூடாது என்பது போன்ற கொள்கைகளுடன், திருடுவதையே தொழிலாகக் கொண்டவர். திருடுவதற்காக சென்னை வரும் அவர், கல்லூரி மாணவியான நிஹரிகாவின் பின்னால் சுற்றுகிறார்.

திருடுவதை மறந்துவிட்டு, ஒரு கட்டத்தில் நிஹரிகாவை கடத்திச் செல்கிறார். இதற்கிடையே நிஹரிகாவை காதலிக்கும் கவுதம் கார்த்திக், அவரை மீட்க எமசிங்கபுரம் செல்கிறார். அங்கு என்ன நடந்தது என்பதே மீதி கதை.

அறிமுக இயக்குநர் ஆறுமுகசாமி வித்தியாசமான பின்னணியில் கலகலப்பாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹரிகா ஆகிய மூவரைச் சுற்றியே நகரும் படத்தில், லாஜிக் சமாச்சாரங்களை ஓரங்கட்டிவிடுகிறார். அதே வேளையில், எமசிங்கபுரம் என்கிற மாயாஜால கிராமம், அங்கு ஒரு கூட்டம், அவர்களது வித்தியாசமான சடங்குகள்.. என நம்பகத்தன்மை குறையும் இடங்களை, நகைச்சுவையை வைத்து ஈடுசெய் திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு இன்னொரு வித்தியாச கதாபாத்திரம். வழக்க மான உடல்மொழியுடன் வந்து துவம் சம் செய்கிறார். வசனம் பேசாமல் முக பாவனையிலேயே சிரிக்கவைக்கும்போதும், மூச்சுவிடாமல் பேசும்போதும் கைதட்டல் வாங்குகிறார். கதையில் பெரிதாக ஒட்டாத கதாபாத்திரமாக இருந்தாலும், இளமை துள்ளலுடன் கல்லூரி மாணவராகவே மாறிவிடுகிறார் கவுதம் கார்த்திக். இவர்களுடன் வரும் டேனியல், ராஜ்குமார், ரமேஷ் திலக் ஆகியோர் இடைவிடாத நகைச்சுவையால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். கிடைத்த கொஞ்சம் வாய்ப்பில் நன்றாகவே நடித்திருக்கும் நிஹரிகாவுக்கு நல்ல அறிமுகம். அவருடன் பேசும் விஜய்சேதுபதியை குறுகுறு வென ரசிக்கும் காயத்ரியின் பார்வை கவிதை.

ஆங்கிலப் பாடல் பாடி, தக்காளி யால் அடி வாங்குவது, எமசிங்கபுரத்தில் பேருந்தில் நடத்துநர் - போலீஸ் காமெடி காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றன. ஆங்காங்கே தேங்கும் படத்தை, இத்த கைய கலகலப்பான காட்சிகளே ஓரளவுக்கு ரசனையாக நகர்த்துகின் றன.

படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே பாடல்கள் உள்ள நிலையில் ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை சிரிப்பை வரவழைக்கிறது. கலை இயக்குநர் ஏ.கே.முத்து வின் கலைநயம், எமசிங்கபுரத்தை ரசனையாக படைத்திருக்கிறது. எமசிங்கபுரத்துக்குள் சென்றுவந்த உணர்வை தரும் ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

விஜய் சேதுபதியின் எமசிங்கபுரம் களம், பின்னணி, சரியாக சொல்லப்படவில்லை. அந்த மக்கள் எந்தவித உணர்வும் இல்லாமல் திரையைக் கடந்து போகிறார்கள். எமசிங்கபுரத் தின் காட்சிகளும் அழுகை, சோகம், நகைச்சுவை, வருத்தம் என எதுவும் தராமல் வெறுமையாய் நகர்கிறது. அதுவே படத்தின் பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது. வித்தியாசமான கதைக் களத்தை தேர்வுசெய்த இயக்குநர், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி சுவாரசியக் காட்சிகள், நம்பகமான சித்தரிப்புகளையும் சேர்த்திருந்தால் முழுமை யான நகைச்சுவைப் படம் கிடைத் திருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

24 mins ago

க்ரைம்

30 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்