சினிமா ரசனை 2.0 - 20: டிராகுலா வேட்டை!

By கருந்தேள் ராஜேஷ்

‘அனிமே’ என்பது ஜப்பானிலிருந்து தயாரிக்கப்படும் அனிமேஷன் படங்களைக் குறிக்கும் சொல் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். உலகெங்கும் மிகவும் பிரபலமாக இருக்கும் அனிமேஷன் வடிவமாக ‘அனிமே’ விளங்குகிறது. அந்த ‘அனிமே’யில் இல்லாத வகைகள் இல்லை. காதல், ஆக் ஷன், மென்சோகம், நகைச்சுவை என்று எல்லா வகைகளிலும் ஏராளமான ‘அனிமே’க்கள் இருக்கின்றன. அதேசமயம், கோனாமி என்கிற ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம், 1986இல் முதல் முறையாக ஒரு வீடியோ கேமை வெளியிடுகிறது. அது ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக ஆக, அதன்பின் அவ்வப்போது அந்த கேமின் பாகங்கள் வெளியாகி இன்றுவரை மிகப் பிரபலமாக இருக்கும் கேம், ‘கேஸில்வேனியா’ (Castlevania). இந்த கேமை முன்வைத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரு அனிமே சீரீஸை எடுக்கிறது. அதன் முதல் பாகம் 2017இல் வெளியானது. அது மிகவும் பிரபலமடைய, அதன்பின் மூன்று பாகங்களை நெட்ஃபிளிக்ஸ் வரிசையாக வெளியிட்டது. 2021இல் நான்காவது பாகத்துடன் கேஸில்வேனியா முடிவடைந்தது.

ரத்தவெறி கொண்ட மன்னன்: ‘கேஸில்வேனியா’வின் முக்கியமான கதாபாத்திரம், நம் அனைவருக்கும் தெரிந்த டிராகுலா. ருமேனியாவில் இருந்த மன்னன் தான் டிராகுலா என்பது நமக்குத் தெரியும். வலேக்கியா (Wallachia) என்கிற பிரதேசத்தை ஆண்டுவந்த வ்ளாட் த இம்பேலர் (Vlad the Impaler) என்கிற மன்னனை வைத்தே டிராகுலா என்கிற ரத்தக் காட்டேரி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ‘கேஸில்வேனியா’வில் டிராகுலா பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாகக் காட்டப்படுவான். ரத்தக் காட்டேரியாக இருக்கும்போதே தனியாக வலேக்கியாவில் ஒரு கோட்டையில் பலவிதமான விஞ்ஞானப் பரிசோதனைகள் செய்துகொண்டிருப்பான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

48 mins ago

உலகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்