பொறியாளர்களைப் பட்டை தீட்டும் கூடுதல் படிப்புகள்

By எஸ்.எஸ்.லெனின்

தங்களுடைய பாடப் பிரிவைத் தவிர வேறு சான்றிதழ், பட்டயப் படிப்புகளைப் படிப்பது கல்லூரி மாணவர்களின் வழக்கம். கணினி தொடர்பான மென்-வன்பொருள் அறிவைக் கூடுதலாகப் பெற, வேலைவாய்ப்புக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள என அவற்றுக்கான காரணங்கள் நீள்கின்றன. அந்த வகையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் படிப்பை முடித்தவர்களுக்கும் பொறியியல் துறையின் பின்னணியில் அவசியமான படிப்புகளையும் தொழில் பயிற்சிகளையும் பார்க்கலாம்.

சிவில் துறை

கட்டுமானம், வடிவமைப்பு தொடர்பான கணினி படிப்புகள் சிவில் மாணவர்களுக்கு அடிப்படையானவை. ஆட்டோ கேட், டிசைன் Visualization Pro, STAAD pro, Revit Architecture, Revit MEP உள்ளிட்டவை இந்தப் படிப்புகளில் அடங்கும். மேலும், பில்டிங் எஸ்டிமேஷன், காஸ்டிங், கம்ப்யூட்டர் எய்டட் லேண்ட் சர்வே போன்றவை அத்தியாவசியமான படிப்புகளாகும். கட்டுமான விபத்துகள், தீ அபாயங்கள், முதலுதவி பயிற்சி போன்றவை கூடுதல் திறனில் அடங்கும். பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளின் பணி வாய்ப்புகளில் இவை கைகொடுக்கும். கல்லூரிப் படிப்பின் நிறைவாகக் குறுகிய காலச் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பாக Interior designing, Construction Supervisor பயிற்சிகளைப் பெறலாம்.

தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகள்

பொதுவாகவே எல்லோருக்கும் புரோகிராமிங் லாங்குவேஜ் படிப்புகளான சி மற்றும் சி++ அவசியம். அதிலும் ஐ.டி., கணினி, எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் இந்தப் படிப்புகளில் முறையான சான்றிதழ் பெற்றிருப்பது வேலைவாய்ப்பில் அனுகூலம் தரும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல், அக்சஸ், SQL போன்றவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தேர்வின் வாயிலாகச் சான்றிதழ் பெறுவது ஒரு வகை. மேலும் வெப்டிசைனிங் தொடர்பான HTML, JAVA script, ASP.NET, SEO, PHP, MySQL உள்ளிட்டவற்றையும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் தொடர்பான அடிப்படைப் பயிற்சியையும் அடுத்தடுத்து மேற்கொள்ளலாம்.

ஐ.டி மாணவர்கள் Information security and Ethical Hacking குறித்த சான்றிதழ் படிப்பு மேற்கொள்ளலாம். Open source Technology குறித்த குறுகிய காலப் படிப்பைத் தரமான நிறுவனத்தின் வாயிலாகப் பெறலாம். ஆர்வத்தின் அடிப்படையில் Animation and Multimedia, Robotics துறைகளின் அடிப்படையைத் தொழில் பயிற்சியாகப் பெறலாம். Digital Marketing, E-Commerce தொடர்பான படிப்புகளையும் இணையம் வாயிலாகவே பெறலாம்.

எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகள்

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பணி வாய்ப்புகளுக்கு SMD எனப்படும் Surface Mount Device பயிற்சி அவசியம். மேலும் மொபைல் ஃபோன் தளத்தில் டெஸ்டிங், டெவலப்மெண்ட், அப்ளிகேஷன்ஸ் சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றிருப்பது அவை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு உதவும். எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்கள் Embedded Systems, PCB designing and VLSI படிப்புகள் CCNA, CCNP போன்ற Cisco சான்றிதழ் படிப்புகள் போன்றவற்றையும் அடுத்தடுத்து மேற்கொள்ளலாம்.

மெக்கானிக்கல் துறைகள்

மெக்கானிக்கல் படிப்பை முடித்தவர்கள் SQC and SPC courses, Six Sigma, 5S certification போன்ற குறுகிய காலப் படிப்புகளைத் தொடரலாம். ஆட்டோமொபைல் துறைக்கு NX CAD, CAM, Nastran மென்பொருள் படிப்புகள் அவசியம். ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் மாணவர்கள் Product Designing, Product Testing ஆகியவற்றில் Automotive Interior, Operation and Manufacturing, Crash Analysis, Solid and Vibration Testing தொடர்பான குறுகிய காலப் படிப்புகளையும் Aircraft Maintenance -Electrical System தொழில் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

எலெக்ட்ரிகல் துறை

எலெக்ட்ரிகல் மாணவர்கள் பொதுவாக SMD சர்வீஸ் பயிற்சி, எலெக்ட்ரிகல் ஆட்டோகேட், டிசைனிங் பயிற்சி, எலெக்ட்ரிகல் சேஃப்டி போன்றவற்றை அடிப்படையாகப் பெறலாம். Programmable logic controller, SCADA பயிற்சிகள் போன்றவற்றை வேலைவாய்ப்பின் அடிப்படையில் கூடுதலாக மேற்கொள்ளலாம். வளரும் தொழில் துறையான Solar Panels சார்ந்த தொழில் பயிற்சியை அனுபவ அடிப்படையில் பெறுவது சிறப்பு. Embedded Systems, VLSI Testing, Networking தொடர்பான தொழில் பயிற்சிகள் வேலைவாய்ப்புக்கு உதவும்.

போட்டிபோடு!

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்கலாம். படிக்கும் பாடத்துக்கும் அவற்றின் நடைமுறைச் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப, சேவை அடிப்படையிலான உதவிகளை மேற்கொள்ளலாம். தன்னார்வலராக அருகிலுள்ள தொழிற்கூடத்தில் பயிற்சி, பொதுச்சேவை மையத்தில் பொதுமக்களுக்கான கணினி உதவி, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் தயாரிப்புகள் உள்ளிட்ட ஓய்வு நேரச் செயல்பாடுகள் உபயோகமான படிப்பினைகளைத் தரும். இந்த வரிசையில் பெரும் நிறுவனங்களின் இன்டர்ன்ஷிப் உதவிகளையும் பெறலாம்.

பிற பொறியியல் துறைகளின் வளர்ச்சி குறித்து இணையம் உதவியுடன் அறிந்திருப்பதும், இலவசப் படிப்புகளை மேற்கொள்வதும் வேலைவாய்ப்பின்போது கைகொடுக்கும். பொறியியல் துறை சார்ந்த கண்காட்சிகள், தொழில் துறைகளின் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பதும் பொறியியல் மாணவருக்கு விசாலம் தரும். பல்வேறு குறுகிய காலப் படிப்புகள், தொழில் பயிற்சிகள் பெறுவது போன்றே, முதுநிலைப் படிப்புக்கான GATE நுழைவுத் தேர்வு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் இப்போதிருந்தே நேரம் ஒதுக்கலாம். கூடுதல் படிப்பைப் போன்றே இந்தத் தேர்வுகளுக்கென்று தனிப் பயிற்சி உதவிகளைப் பெறலாம்.

மென்திறன் நுட்பமும் தேவை!

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் தொடக்க 2 வருடங்களில் ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், தொடர்புகொள்ளுதல் போன்ற மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். இவற்றுக்கெனத் தனிப் பயிற்சியாகவோ இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் உதவியுடனோ தயாராகலாம். பின்னர் படிப்படியாகத் துறை சார் கூடுதல் படிப்புகள், தொழில் பயிற்சிகளில் இறங்கலாம்.

சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், யுடியூப் வாயிலாகவும் படிப்பு சார்ந்த தொழில்நுட்பக் கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளலாம். இந்த முயற்சிகள் படிப்பில் ஈடுபாட்டையும் சுவாரசியத்தையும் கூட்டும். மேலும் படிக்கும் துறை சார்ந்த தொடர்புகளையும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

க்ரைம்

20 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்