ஆங்கிலம் அறிவோமே - 277: எதுக்கு காத்திருக்கீங்க?

By செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எஸ்.

கேட்டாரே ஒரு கேள்வி

“R & D பிரிவு என்றால் அது Research & Development என்பதைக் குறிக்கும். RDX எனும் வெடிமருந்தின் விரிவாக்கத்துக்கும் இதற்கும் தொடர்புண்டா? ’’
முதல் இரண்டு எழுத்துகள் அதே சொற்களைத்தான் குறிக்கின்றன! RDX என்பதன் விரிவாக்கம் Research & Development Explosive.
RDX என்ற பெயரை உருவாக்கி யவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இந்தப் பெயர் அமெரிக்காவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் சைக்ளோனைட் என்ற பெயரும் அங்கு சகஜம். ஜெர்மானியர்கள் இதை ஹெக்ஸோஜென் என்றும் இத்தாலியர்கள் இதை T4 என்றும் அழைக்கிறார்கள்.

சில ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் No strings attached என்று குறிப்பிடுகிறார்களே இதற்கு என்ன பொருள்?
பல விளம்பரங்களில் வீட்டின் அளவு, விற்பனைத் தொகையைக் குறிப்பிடும்போது கூடவே சின்னதாக ஒரு நட்சத்திரக் குறியைப் போட்டிருப்பார்கள். விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில் இந்த நட்சத்திரக் குறியைத் தொடர்ந்து conditions apply என்று இருக்கும். அதாவது அவர்கள் கூறும் தகவல்கள் சில (?) நிபந்தனைகளுக்கு உட்பட்டவை என்பதை இது அறிவிக்கிறது.

No strings attached என்பது இதற்கு நேரெதிரான பொருள் கொண்டது. ஒரு குறிப்பிட்ட ஆஃபர் எந்த நிபந்தனைக்கும் உட்படாதது என்று பொருள். நீங்கள் உங்கள் உறவினரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் கேட்கிறீர்கள். அவர் “ஒரு வருடத்துக்குள் இதைத் திருப்பித்தர வேண்டும். நடுவில் எனக்கு எப்போது தேவை ஏற்பட்டாலும் நீங்கள் அந்தக் கடன் தொகையைத் திருப்பியளிக்க வேண்டும்” என்கிறார். இதை ஏற்க மறுக்கும் நீங்கள் “I want the money with no strings attached” என்று கூறலாம்.

“Wait, await ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் கொண்டவையா. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாமா?’’
நண்பரே, இரண்டும் ஒரே மாதிரிப் பொருள் கொண்டவைதான். ஆனால், தொலைக்காட்சித் தொடரில் ‘அவருக்குப் பதிலாக இவர்’ என்று நடிகர்களை அலட்சியமாக மாற்றிக் காட்டுவதுபோல் இவற்றைப் பயன்படுத்த முடியாது.
Await என்ற verb-ஐப் பயன்படுத்த வேண்டுமானால் அந்தச் சொல்லில் object குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். (Object என்பதைச் செயப்படுபொருள் எனலாம். அதாவது யாரை அல்லது எதை என்பதற்கான பதில் அந்த வாக்கியத்தில் இருக்க வேண்டும்).
நடிகர் விஜய் வில்லனிடம் "I am waiting" என்று சொன்னது சரி. ஆனால், அவர் “I am awaiting” என்று கூறியிருந்தால் அது தவறு.


“I am awaiting your reply” என்பது சரியானது. ஏனென்றால்
“I am awaiting” என்று கூறும்போது எதற்காக நான் காத்திருக்கிறேன் என்பதற்கான விடையும் (அதாவது ஆப்ஜெக்ட்) அந்த வாக்கியத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதேபோல They are awaiting என்று கூறுவது தவறு. They are awaiting the birth of their child என்று கூறலாம்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த ஆப்ஜெக்ட் என்பது ஒரு பொருளாகத்தான் இருக்குமே தவிர, மனிதனாக இருக்காது. I am awaiting your reply என்பது சரி.
I am awaiting you என்பது தவறு.
கணிசமானவர்கள் செய்யும் மற்றொரு தவறு awaiting என்ற சொல்லைத் தொடர்ந்து for என்று பயன்படுத்துவது. Await என்பதே wait for என்ற பொருள் கொண்டதுதான்.
Wait-ஐப் பொறுத்தவரை for பயன்படுத்தலாம். I am waiting for you என்பதுதான் சரி, I am waiting you என்று எழுதக் கூடாது.
கீ​ழே உள்ள வாக்​கியங்களைப் படித்தால் மேலும் தெளிவு கிடைக்கும்.
1. I have been waiting for the train for three hours.
2. Let us wait until they arrive.
3. The leave letter is awaiting sanction of the Manager.

Confident - Confidant
Confidence என்றால் நம்பிக்கை. இது noun. Confident என்பது verb.
Confidant என்றால் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர் என்று பொருள். I have no confidant in my life என்றால் என் வாழ்க்கையில் (என் மனதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு) நம்பிக்கையான எவரும் இல்லை என்று பொருள்.

தொடர்புக்கு:
aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்