வேலை வேண்டுமா?: எம்.பி.ஏ. முடித்த பொறியியல் பட்டதாரிகளுக்குப் பணி 

By செய்திப்பிரிவு

ஜெ.கு. லிஸ்பன் குமார் 

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தொழில்நுட்பப் பிரிவுகளில் (கேபிட்டல் பிளானிங், கிரெடிட் அனலிஸ்ட்) சிறப்பு அலுவலர் பணிகளில் 76 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.  

தகுதி 

கிரெடிட் அனலிஸ்ட் பதவிகளுக்கு எம்.பி.ஏ. அல்லது சி.ஏ. படித்த பி.இ., பி.டெக். பட்டதாரிகளும், கேபிட்டில் பிளானிங் பதவிக்கு பட்டப் படிப்புடன் சி.ஏ. அல்லது எம்.பி.ஏ. அல்லது மேலாண்மையில் முதுகலை டிப்ளமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதோடு குறைந்தபட்சம் 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் எதிர்பார்க்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப குறைந்த வயது 23, 25 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 35, 45 ஆகவும் மாறுபடும்.  

தகுதியுள்ள நபர்கள் கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலமாகப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். வருடாந்திரச் சம்பளம் ரூ.15 லட்சம், ரூ.18 லட்சம், ரூ.41 லட்சம் என பதவிக்கு ஏற்ப மாறுபடும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் இணைய தளத்தைப் (www.sbi.co.in/careers) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, முன்னனுபவம் தொடர்பான விவரங்கள், பணியின் தன்மை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பணியிடம் போன்றவற்றை வங்கியின் இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.  

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 12 ஆகஸ்ட் 2019 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

9 hours ago

மேலும்