ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம்

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வில் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்த ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவன் நவீன்குமார் 1189 மதிப்பெண்கள் எடுத்து ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சண்முகசுந்தரம் ஆட்டோ ஓட்டுநர். மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தை 1188 மதிப்பெண் பெற்ற திண்டல்பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவி கே.எஸ்.பிரீத்தி ஸ்ரீ பெற்றுள்ளார். 1187 மதிப்பெண் எடுத்த ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவி சுவாதி 3வது இடம் பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடந்த மேல்நிலைப்பள்ளிகளில் 78 பள்ளி கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கணிதத்தில் 316 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 208 மாணவர்க ளும், வணிகவியலில் 160 பேரும், கணக்குப்பதிவியலில் 158 பேரும், வேதியியலில் 113 பேரும், கணினி அறிவியலில் 94 பேரும், பொருளாதாரத்தில் 77 பேரும், விலங்கியல் பாடத்தில் 53 பேரும், வணிக அறிவியலில் 40 பேரும், தாவரவியல் மற்றும் புள்ளியியல் பாடத்தில் தலா ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதோடு,செய்முறை தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சதம் அடித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 19 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு மேல் நிலை பள்ளிகள் அளவில், அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிப்பிரியா 1166 மதிப்பெண் எடுத்து முதலிடத்தையும், துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளை மாணவன் மதன்குமார் 1159 மதிப்பெண் எடுத்து இரண்டாமிடமும், அதே பள்ளி மாணவன் விஜயகுமார் 1151 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்