வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்

By ஜெகுலி

வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer) நேரடியாக நிரப்ப உள்ளது. கடந்த முறையை விட தற்போது அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான முதல் நிலைத்தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது.

இந்தத் தேர்வுக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்தான். ஆனால், அவர்கள் 1.9.2015-க்கு முன்பாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு உண்டு.

மே மாதம் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெறும். ஹால் டிக்கெட்டை ஜூன் 9-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

தேர்வு முறையானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதன்முறையாக, ஆன்லைன் தேர்வும் இந்த முறை உள்ளது.

முதல்நிலைத் தேர்வில், ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். தேர்வு 1 மணி நேரம் நடக்கும். இதில் வெற்றி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், ஆங்கிலம், பொது அறிவு, டேட்டா அனலைசிஸ், இன்டர்பிரட்டேசன், ரீசனிங் ஆகிய 4 பகுதிகளில் 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.

ஆங்கிலத்தில் கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல் என விரிவாக விடையெழுதும் ஒரு பகுதியும் உண்டு. 50 மதிப்பெண்கள் கொண்ட இந்தத் தேர்வுக்கு 1 மணி நேரத்தில் பதில் எழுத வேண்டும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

இந்தத் தேர்வில் வெற்றியடைய, முதலில் பயிற்சி நிறுவனங்களின் வகுப்புகளுக்கு முறையாகச் சென்று, தேவையானத் திறன்களைப் பற்றிய புரிதலைப் பெற வேண்டும்.வகுப்பில் விவாதிக்கப்படுவதை வீட்டிலும் வந்து பயிற்சி எடுக்க வேண்டும். இரண்டாம்கட்டமாக, வகுப்புகளில் கற்றுக்கொண்டதை மேலும் கூர் தீட்ட வேண்டும்.

புத்தகங்களில் உள்ள பயிற்சிகளை முழுமையாகச் செய்து பார்க்கவேண்டும். மூன்றாவதாக, மாதிரித் தேர்வு வினாத்தாள்களை சேகரிக்க வேண்டும். அவற்றை நேரக்கட்டுப்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு எழுதி முடித்து பயிற்சி எடுக்க வேண்டும்.

இந்தக் கட்டத்தில் உங்களின் பலவீனம் உங்களுக்குத் தெரிய வரும். உங்களின் பலமும் உங்களுக்குத் தெரிய வரும். பலவீனத்தைச் சரி செய்வதற்காக நீங்கள் செலுத்துகிற உழைப்புதான் கட்டாயம் உங்களை வெற்றியின் பக்கம் கொண்டு போய் நிறுத்தும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

57 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

கருத்துப் பேழை

58 mins ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்