இறுதித் தேர்வுக்கு நீங்கள் தயாரா?

By செய்திப்பிரிவு

பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் இருக்கும் வீடுகளில் கடந்த ஒரு வருடமாக அனைவரும் பரபரப்பாகவே இருந்திருப்பார்கள். அதுவும் பிப்ரவரி மாதம் தொடங்கிவிட்டதென்றால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் பரீட்சை காய்ச்சல் அடிக்கத் தொடங்கிவிடும். இதோ, இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு விரைவில் தொடங்கப் போகிறது. அது முடிந்தவுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடக்கப் போகிறது. தேர்வைப் பற்றி அச்சப்படாமல், நல்ல தயாரிப்புடன் அதை எதிர்கொள்வது எப்படி?

ஒரு வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே பாடம்தான். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலரால் மட்டும் எப்படி நன்றாகப் படிக்க முடிகிறது? ஒரு சிலர் இயல்பாகவே கவனக்குவிப்பில் சிறந்து விளங்குவார்கள். படித்த விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.

ஆனால் எல்லோருக்குமே இந்தத் திறமைகள் இயல்பாக அமைந்துவிடு வதில்லை. அதற்காக இது நமக்கு வராது என்று விட்டுவிட முடியாது. கீழே காணப் படும் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் படிக்கும் விதத்திலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

நேரம், கற்கும் சூழல் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். இதை எப்படிச் செய்வது?

• உங்கள் இலக்குகள் என்ன என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள் (காலாண்டுத் தேர்வில் நான் இவ்வளவு மதிப்பெண் வாங்கினேன், அரையாண்டுத் தேர்வில் வகுப்பில் 5ஆவது இடத்தில் வந்தேன், இறுதித் தேர்வில் இந்த இடத்துக்கு தேர்வு பெறுவேன்...)

• ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில் அதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

• படித்தல், செயல்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றை அவ்வப்போதே செய்து முடியுங்கள். ஒத்திப் போடாதீர்கள்.

• ஒவ்வொரு தேர்வுக்கும் முன் திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். அதன்படி குறித்த நேரத்தில் செய்து முடிக்கிறீர்களா என்பதிலும் கவனமாக இருங்கள்.

• நேரத்தை நிர்வகிப்பது ஒரு கலை. நேரம் வீணாகும் விதங்களைக் கவனித்து அவற்றைத் தவிருங்கள்.

தேர்வுகளை எதிர்கொள்ளுதல்:

• பாடம் சம்பந்தமான செயல்முறைப் பயிற்சிகளை அவ்வப்போது முடித்துவிடுங்கள். புத்தகத்தைப் படியுங்கள். படிக்கும்போதே அதை எந்த அளவு புரிந்துகொண்டுள்ளோம் என்பதை ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

• கடந்த காலத் தேர்வுத் தாள்களை நன்கு ஆய்வு செய்யுங்கள். அப்போதுதான் இனி வரும் தேர்வை எதிர்கொள்ளும் திறன்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும்.

• தேர்வு குறித்த விவரங்களை ஆசிரியரிடம் கேளுங்கள். பாடப் புத்தகங்களிலும், விரிவுரைகளிலும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட விஷயங்கள் எவை என்பது பற்றி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

• தேர்வு பற்றிய மனஅழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பதை அறிந்து, அவற்றைப் பின்பற்றுங்கள்.

• பாடங்களைப் பகுதிகளாகவோ பாட வரிசைப்படியோ பிரித்துக்கொண்டு படியுங்கள்.

• பல்வேறு வகையான கேள்விகளை எவ்வாறு புரிந்துகொண்டு பதிலளிப்பது என்பதற்கான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

• தேர்வுத் தாளை முழுவதுமாகப் படியுங்கள். படபடப்பு அடங்கும் விதத்தில் முதலில் சுலபமான கேள்விகளுக்கு விடைகளை எழுதுங்கள். அதன் பின் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் கேள்விகளை எழுதுங்கள், அதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கவனத்துடன் பதில்களை எழுதுங்கள்.

• எழுதத் தொடங்கும் முன்னர் விரிவாக எழுத வேண்டிய கேள்விகளுக்கான பதில்களைப் பற்றிய குறிப்புகளைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

30 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்