10வது, பிளஸ்-2 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்புக்கும், பிளஸ்-2 க்கும் துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்வுத்துறையின் இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணை பொதுத்தேர்வுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களின் படிப்பு காலம் வீணாகாமல் இருப்பதற்காக தமிழக அரசால் துணை பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்புக்கான துணை பொதுத்தேர்வு வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 க்கான துணை பொதுத்தேர்வு 23-ந்தேதி ஆரம்பிக்கிறது. அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு துணை பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அதனை டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

முதல்முறையாக ஆன்லைன் முறை

தேர்வுகள் தொடங்கும் தேதியான 23-ந்தேதி வரை ஹால் டிக்கெட்டை பெறலாம். யாருக்கும் தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படாது.

சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்தவர்கள் 21, 22-ந்தேதிகளில் ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் தற்போதுதான் முதல்முறையாக ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்