விழுப்புரம்: பள்ளி விரிவாக்கத்துக்கு இடம் கோரி மரத்தடியில் பாடம் படித்த மாணவர்கள்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கக் கோரி மாணவர்கள் மரத்தடியில் பாடம் படித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி கடந்த 2011-2012-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி அமைந்துள்ள இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட இடம் இல்லாததால் ஊராட்சி நிர்வாகம் மூலம் இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட கல்வித்துறை கோரிக்கை வைத்தது. புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது.

இந்த இடம் குடியிருப்பு பகுதியிலிருந்து தொலைவில் இருப்பதால் பெற்றோர்கள் ஏற்க மறுத்து, மரத்தடியில் வகுப்புகளை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்தனர். மாண வர்களும் மரத்தடியில் பாடம் படித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் வட்டாட்சியர் ரவிகண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வரும் 22-ம் தேதிக்குள் மாற்று இடத்தைத் தேர்வு செய்துத் தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

7 mins ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

26 mins ago

ஆன்மிகம்

36 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

மேலும்